நக்ஸலைட் தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

news18
Updated: March 13, 2018, 4:46 PM IST
நக்ஸலைட் தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு
நக்ஸலைட் தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழப்பு
news18
Updated: March 13, 2018, 4:46 PM IST
சத்தீஸ்கரில்  ரிசர்வ் பாதுகாப்புப் படையின் (சிஆர்பிஎப்) மீது நக்சலைட்டுகள்  நடத்திய கண்ணி வெடிகுண்டு தாக்குதலில் 9 ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

இன்று  நண்பகல்  12.30 மணியளவில்  சி.ஆர்.பி.எஃப் படையினர் ரோந்துப் பணியில்  ஈடுபட்டிருந்தனர்.  அப்போது  அவர்கள் மீது  நக்சலைட்டுகள்   தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலின் போது 6 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும்  சம்பவ இடத்திற்கு கூடுதல் துணை ராணுவ படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு நக்ஸலைட்டுகளை தேடும் பணி நடந்து வருகிறது.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்