முகப்பு /செய்தி /இந்தியா / “3 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம்”... டெல்லி இளம்பெண் கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

“3 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம்”... டெல்லி இளம்பெண் கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

நிக்கி யாதவுடன் சஹில் கெலாட்

நிக்கி யாதவுடன் சஹில் கெலாட்

ஷகிலின் தந்தை, நண்பர்கள் உட்பட 5 பேரை கைது செய்த டெல்லி போலீசார், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் இளம்பெண் நிக்கி யாதவ் என்பவரைக் கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் அடைத்த வழக்கில் காதலனின் தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள நசார்ப்கார்க்கைச் சேர்ந்த சாஹில் கெலாட் ( வயது 24) அங்கு தாபா உணவகம் நடத்தி வருகிறார். இவருக்கும் டெல்லியில் தங்கி மருத்துவப் பயிற்சி படிப்பு படித்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த 25 வயதான நிக்கி யாதவுக்கும் பேருந்தில் செல்லும்போது காதல் மலர்ந்துள்ளது.

இந்த காதல் தீவிரமடைய இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து லிவ் - இன் - ரிலேஷன்ஷிப் முறையில் வசித்து வந்துள்ளனர். மணாலி, ரிஷிகேஷ், ஹரித்துவார் என சுற்றுலா சென்று ஜாலியாக இருந்துள்ளனர். இதனிடையே  காதலித்த நிக்கி யாதவை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள சாஹில் கெலாட் திட்டமிட்டுள்ளார்.

இதற்கு நிக்கி எதிர்ப்பு தெரிவித்ததால் செல்போன் சார்ஜ் ஒயரில் கழுத்தை இறுக்கி  அவரை ஷகில் கொலை செய்தார். அவரை கைது செய்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 2020 ஆண்டிலேயே ஷகில் காதலி நிக்கியை கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.

நிக்கிக்கும்-ஷகிலுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்ததும், கொலை செய்ததும் ஷகிலின் தந்தைக்கு ஏற்கனவே தெரியும் எனவும், உடலை ஃபிரிட்ஜில் அடைத்ததில் காவல்துறை காவலர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது எனவும் தெரிய வந்தது. இதனையடுத்து ஷகிலின் தந்தை, நண்பர்கள் உட்பட 5 பேரை கைது செய்த டெல்லி போலீசார், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

First published:

Tags: Crime News, Delhi, Murder