கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு பஞ்சாப் மாநிலத்தின், நகர்ப்புறங்களில் மட்டும் வரும் 15ம் தேதி வரையில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான அறிக்கையின் படி, நகர்ப்பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்படுவதாகவும், ஆன்லைன் மூலம் மட்டும் பாடங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் ஏசி பேருந்து உள்ளிட்டவற்றில், 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
Also read... அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் பணிக்கு வந்தால் போதும் - மத்திய அரசு!
Also read... 34 மாணவர்களுக்கு கொரோனா - அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல்!
Also read... 12-ம் தேதி புதுச்சேரி வருகிறார் பிரதமர் - தமிழிசை சௌந்தரராஜன் தகவல்!
இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஊழியர்களை மட்டுமே, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அனுமதிக்க பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Night Curfew, Punjab