ராஜஸ்தானில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

ராஜஸ்தானில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

இரவு நேர ஊரடங்கு

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 16 முதல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 16 முதல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால், அனைத்து மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 6,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 29 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 16 முதல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு இதில் விலக்கு அளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read :  உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வுக்கும் கொரோனா பாதிப்பு

    மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல் படுத்தியுள்ளன.

    இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: