• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடே இப்படிப்பட்டவரா? - சக NCB அதிகாரி கூறும் உண்மைகள்!

ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடே இப்படிப்பட்டவரா? - சக NCB அதிகாரி கூறும் உண்மைகள்!

Sameer wankhede

Sameer wankhede

சில பிக் ஷாட்கள் குறித்து அசால்டாக தகவல்களை திரட்டி NCB அதிகாரிகளை சமீர் வான்கடே ஈர்த்தார். இதனால் NCBயில் அவரின் செல்வாக்கு அதிகரித்தது.

  • Share this:
திறமைமிக்கவர் என பெயரெடுத்தவர் என்பதால் போதைப்பொருள் தடுப்பு முகமை, சமீர் வான்கடேவை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திய நிலையில், இன்று அவர் மீதே ஊழல் விசாரணை நடைபெற்று வருகிறது.

உல்லாச கப்பலில் நடைபெற்ற பார்ட்டியின் போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை போதைப் பொருள் தடுப்பு முகமை (NCB) அதிகாரிகளால் கடந்த அக்டோபர் 2ம் தேதியன்று கைது செய்யப்பட்டார். ஆர்யன் கானை கைது செய்தது NCB-ன் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையினான குழுவினர். ஆனால் தற்போது சமீர் வான்கடே மீதே பல்வேறு வகையிலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவரே கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீர் வான்கடே குறித்து பல தகவல்களை போதைப் பொருள் தடுப்பு முகமையின் மூத்த அதிகாரி ஒருவர் நியூஸ் 18 இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also read:  வாகன சோதனையில் வாட்ஸ் அப் சாட்களை செக் செய்யும் போலீசார் – இது சரியா?

குஜராத்தில் உள்ள அரசியல் தலைவர்களை கொலை செய்வதற்காக, இந்திய இளைஞர்கள் சிலருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சிரியாவில் பயிற்சி அளித்த வழக்கு தொடங்கி பல்வேறு பயங்கரவாதம் தொடர்புடைய வழக்குகளை தேசிய விசாரணை முகமையில் பணிபுரிந்த போது திறம்பட விசாரணை நடத்தியவர் சமீர் வான்கடே.

சமீர் வான்கடேவின் சிறப்பான செயல்பாடு போதைப் பொருள் தடுப்பு முகமையை ஈர்த்தது. மும்பை மண்டல NCB இயக்குனராக நீண்டகாலம் இருந்த அதிகாரியின் செயல்பாட்டில் திருப்தி ஏற்படாததால் சமீர் வான்கடேவை அந்த இடத்துக்கு கொண்டு வர NCB தீர்மானித்தது. அதன் பேரில் DDG மட்டத்திலான உயர் அதிகாரி ஒருவரின் பரிந்துரையின் பேரில் தான் சமீரை நேர்காணலுக்கு அழைத்தனர். 2020ம் ஆண்டு சமீர் 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் NCB அதிகாரி ஆனார். சிறப்பான செயல்பாட்டினால் அப்போதைய NCB தலைமையின் செல்லப் பிள்ளையாக சமீர் திகழ்ந்தார். அவர்களின் குட்புக்கிலும் இடம்பிடித்தார்.

Also read:  கீழ்த்தரமான அரசியல்.. கணவருக்கு நீதி வேண்டி NCB அதிகாரியின் மனைவி மகாராஷ்டிர முதல்வருக்கு உருக்கமான கடிதம்!

சில பிக் ஷாட்கள் குறித்து அசால்டாக தகவல்களை திரட்டி NCB அதிகாரிகளை ஈர்த்தார். இதனால் NCBயில் அவரின் செல்வாக்கு அதிகரித்தது. பின்னர் NCBயின் தலைமையில் மாற்றம் வந்தபோது காட்சிகள் தலைகீழாக மாறின. இருப்பினும் அவருக்கு ஆக்ஸ்ட் 2021 வரையிலும் பின்னர் டிசம்பர் 31 வரையிலும் பணி நீட்டிப்பு கிடைத்தது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் பல வழக்குகளை திறம்பட சமீர் கையாண்டிருக்கிறார், ஆனால் இந்த வழக்கில் அவரின் செயல்பாடு சரியாக அமையவில்லை. அவரை தூக்கிவிட்ட NCB இன்று அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது. சமீருக்கு எதிரான குற்றச்சாட்டுகளும், கிடைத்திருக்கும் ஆரம்பகட்ட ஆதாரங்களும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக கருதப்பட்டாலும், அவரின் பணித்திறனை கேள்விக்குறியதாக மாற்றியுள்ளன.

Also read: மது, குட்கா போல போதை பொருட்களை வரி செலுத்தி மக்கள் பயன்படுத்த அனுமதி தேவை – காங்கிரஸ் எம்.பி யோசனை

சமீர் வான்கடே மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க NCBயின் இயக்குனர் எஸ்.என்.பிரதான், துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங்கை நியமித்துள்ளார். சமீர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால் அவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்.” இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

பிரபாகர் செயில் என்ற சாட்சி, சமீர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யனை விடுவிக்க 25 கோடி ரூபாய் கேட்டதாக கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது அவர் மீது விசாரணை நடைபெறுகிறது. இது தவிர மும்பை போலீசாரும் சமீர் மீதான ஊழல் புகாரை விசாரித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: