கேரள தங்கம் கடத்தல் வழக்கு... ஐக்கிய அரபு அமீரகம் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ முடிவு!

கோப்புப்படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    கேரள தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கத்தை அனுப்பியது யார்? அதில், தொடர்புடைய இந்தியர்கள் யார்? என்ற கோணத்தில் விசாரிக்க உள்ளனர்.

    மேலும், தங்கம் கடத்தல் கும்பலுக்கு தீவிரவாதிகளுடன் உள்ள தொடர்புகள் குறித்த ஆவணங்களை அந்நாட்டு அரசிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

    Also read... ₹500 பணம், ஆதார் எண் கொடுத்தால் அரை மணி நேரத்தில் ஒரிஜினல் இ பாஸ்... கடலூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாட்ஸ் அப் ஆடியோ!

    தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ரமீஷ், தமிழகத்தில் உள்ள சில கும்பல் உதவியுடன் தங்கம் கடத்தியிருப்பதும், சென்னை விமான நிலையம் வழியாக கடந்த ஆண்டில் மட்டும் 400 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதும் தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்துள்ளது.



    இதேபோன்று அதிகாரிகளிடம் எளிதில் பிடிபடாமல் தவிர்க்க நாடு முழுவதும் பல்வேறு குழுக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தங்கம் கடத்தியதும் கண்டறியப்பட்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published: