காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பிரிவினைவாத தலைவர்கள் - NIA தகவல்

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு இளைஞர்களை பிரிவினைவாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி பயிற்சி பெறச் செய்ததாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பிரிவினைவாத தலைவர்கள் - NIA தகவல்
என்.ஐ.ஏ. அதிகாரிகள்
  • News18
  • Last Updated: October 2, 2020, 7:38 PM IST
  • Share this:
குல்காம் பகுதியைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் மீது தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அதில், 2016 முதல் 2018 வரையான காலத்தில் பல்வேறு காஷ்மீர் இளைஞர்களையும் உரிய ஆவணங்களுடன் பாகிஸ்தானுக்கு பிரிவினைவாத தலைவர்கள் அனுப்பிவைத்ததாக தெரிவித்துள்ளது.



பாகிஸ்தானில் 5 முதல் 15 நாட்களுக்கு தீவிரவாத முகாம்களில் பயிற்சி பெற்ற அவர்களை, தொடக்கத்தில் ஸ்லீப்பர் செல்களாக தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தியதாகவும், பின்னர் தீவிரவாதத் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாகவும் தேசிய புலனாய்வு முகமை குறிப்பிட்டுள்ளது.
First published: October 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading