ஹோம் /நியூஸ் /இந்தியா /

மாலேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாலேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிரக்யா தாகுர்

பிரக்யா தாகுர்

நடைபெறும் தேர்தலில், யாரையும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தடை செய்வதற்கு சட்டப்படி இந்த நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரக்யா தாகுர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பதற்கு எங்களுக்கு அனுமதியில்லை என்று தேசிய புலனாய்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங்குக்கு எதிராக பிரக்யா தாகுரை வேட்பாளராக பா.ஜ.க களமிறக்கியுள்ளது. பிரக்யாவை வேட்பாளராக பா.ஜ.க அறிவித்ததற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தநிலையில், மாலேகான் குண்டு வெடிப்பில் உயிரிழந்த சயீத் அகமதுவின் தந்தை நிசார் பிலால் என்பவர் தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், பிரக்யா தாகுர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று நடைபெற்ற விசாரணையில், ‘நடைபெறும் தேர்தலில், யாரையும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தடை செய்வதற்கு சட்டப்படி இந்த நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அது தேர்தல் அதிகாரிகளின் கடமை. பிரக்யா தேர்தலில் போட்டியிடுவதை நீதிமன்றம் தடை செய்ய முடியாது. இந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

Also see:

First published:

Tags: Bhopal S12p19, BJP, Elections 2019, Lok Sabha Elections 2019, Madhya Pradesh Lok Sabha Elections 2019