ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடு குறித்து NIA தலைவர் ஆய்வு

ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடு குறித்து NIA தலைவர் ஆய்வு

ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் பிரதமர் மோடி செல்லும் நிலையில் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை என்ஐஏ தலைவர் குல்தீப் சிங் ஆய்வு செய்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் பிரதமர் மோடி செல்லும் நிலையில் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை என்ஐஏ தலைவர் குல்தீப் சிங் ஆய்வு செய்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் பிரதமர் மோடி செல்லும் நிலையில் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை என்ஐஏ தலைவர் குல்தீப் சிங் ஆய்வு செய்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பின் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு நாளை(ஏப். 24) செல்கிறார். அங்குள்ள சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பகுதியில் பஞ்சாயத் ராஜ் தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப் பிரிவு 370 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் நீக்கப்பட்டது.

  இதன் பின்னர் பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பை ஆய்வு செய்ய தேசிய புலான்ய்வு முகமை அமைப்பின் தலைவர் குல்தீப் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். பிரதமர் மோடி உரையாற்றவுள்ள மைதானத்தை ஆய்வு செய்த குல்தீப் சிங், ஜம்முவில் உள்ள சன்ஜவான் பகுதியையும் பார்வையிட்டார்.

  பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. சன்ஜவான் பகுதியில் இரு ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் நடத்திய மோதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் இருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதையடுத்து மாநில காவல்துறையுடன் என்ஐஏ அமைப்பும் சேர்ந்து இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறது.

  இதையும் படிங்க: எதிர்க்கட்சி நடத்திய இப்தார் விருந்தில் பங்கேற்ற நிதீஷ் குமார் - பிகார் அரசியலில் பரபரப்பு

  பிரதமர் மோடியின் ஜம்மு காஷ்மீர் வருகையை சீர்குலைக்கும் திட்டத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல் டிஜிபி தில்பக் சிங் கூறியுள்ளார். 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் நினைவாக ஆண்டு தோறும் ஏப்ரல் 24ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

  பிரதமருடன் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரி ராஜ் சிங்கும் ஜம்மு காஷ்மீர் செல்லவுள்ளார். இந்த பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாடத்தில் பங்கேற்கும் பிரதமர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே கட்டப்பட்டுள்ள 8.45 கிமீ பனிஹல்-குவாசிகுன்ட் சுரங்க சாலையை தொடங்கி வைக்கிறார். சுமார் ரூ.2,100 கோடி மதிப்பிலான இந்த சுரங்க சாலை திட்டத்தால் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான பயண தூரம் இரண்டு மணிநேரம் குறையும்.

  அத்துடன் மின் உற்பத்தி திட்டங்கள் உள்பட, ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Jammu and Kashmir, PM Modi