ஹோம் /நியூஸ் /இந்தியா /

சட்டவிரோத ஆயுத பயிற்சி - தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாவோயிஸ்டுகள் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சட்டவிரோத ஆயுத பயிற்சி - தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாவோயிஸ்டுகள் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுத்து பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக 20 மாவோயிஸ்டுகள் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாவோயிட்டுகள் மீது தேசிய புலனாய்வு முகமை(NIA) குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.அதில், இவர்கள் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடவும், இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்கவும் திட்டமிட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.இதை என்ஐஏ செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

  இதில் பத்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். என்ஐஏ தகவலின் படி, ராமநாதபுரத்தை சேர்ந்த காளிதாஸ், கோவையை சேர்ந்த தானிஷ், வேலூரை சேர்ந்த ராகவேந்திரன், கோவையை சேர்ந்த சந்தோஷ் குமார், திருவண்ணாமலையை சேர்ந்த திருவேங்டம், கோவையை சேர்ந்த தினேஷ், தேனியை சேர்ந்த கார்த்திக், ராணிபேட்டையை சேர்ந்த ரமேஷ், விருதுநகரை சேர்ந்த ஐயப்பன், திருநெல்வேலியை சேர்ந்த அனேஷ் பாபு ஆகியோர் மீது ஆயுதச் சட்டம், UAPA சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இவர்களுடன் கேரளா, கர்நாடகா,மகாராஷ்டிராவைச் சேர்ந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலாம்பூர் காட்டுப் பகுதியில் இந்நபர்கள் சட்டவிரோதமாக நுழைந்து சந்திப்புகளை நடத்தியுள்ளனர். அத்துடன் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இவர்கள் மீது மலப்புரம் மாவட்ட காவல்துறை 2017ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கு விசாரணை கேரளா பயங்கரவாத தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்டது.

  இதையும் படிங்க: கடந்த 10 ஆண்டில் நாடு முழுவதும் 17 லட்சம் பேருக்கு HIV பாதிப்பு - RTI மூலம் தகவல்

  இதைத் தொடர்ந்து என்ஐஏ இந்த வழக்கை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் விசாரித்து வருகிறது. இந்த நபர்கள் சட்டவிரோதமான ஆயுத பயிற்சியில் ஈடுபட்டு பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தாக தெரிவித்த என்ஐஏ செய்தித் தொடர்பாளர், இவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து வருவதாக கூறினார். சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து ஆதாரமாக செல்போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவுகள், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக எஐஏ தெரிவித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Maoist, NIA