Home /News /national /

புல்வாமா தாக்குதல் வழக்கில் NIA குற்றப்பத்திரிகை தாக்கல் - ஒராண்டுக்கு முன்னதாகவே இந்தியாவுக்குள் ஊடுருவிய முக்கிய தீவிரவாதி

புல்வாமா தாக்குதல் வழக்கில் NIA குற்றப்பத்திரிகை தாக்கல் - ஒராண்டுக்கு முன்னதாகவே இந்தியாவுக்குள் ஊடுருவிய முக்கிய தீவிரவாதி

2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

புல்வாமா தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது உமர் ஃபாரூக், கடந்த 2018ம் ஆண்டே, ஜம்முவின் சம்பா எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்கு நுழைந்ததாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை 13500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

    ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், இந்த தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதமே, முக்கிய குற்றவாளியான முகமது உமர் ஃபாரூக் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில், என்.ஐ.ஏ சார்பில், 13 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் படிக்க... ஏறிய வேகத்தில் மளமளவென இறங்கும் தங்கம் விலை - 2022 ஆண்டில் சவரன் ₹ 60 ஆயிரத்தை தொடுமாம்

    அதில், பாகிஸ்தானை சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், அவருடைய சகோதரர்கள், ராப் அஸ்கார், மவுலானா முகமது அமார் உட்பட, 19 பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Pulwama Attack

    அடுத்த செய்தி