ஹோம் /நியூஸ் /இந்தியா /

தீவிரவாத அமைப்புகளில் இளைஞர்களை சேர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஊக்குவிப்பதாக என்ஐஏ பரபரப்பு குற்றச்சாட்டு...

தீவிரவாத அமைப்புகளில் இளைஞர்களை சேர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஊக்குவிப்பதாக என்ஐஏ பரபரப்பு குற்றச்சாட்டு...

மாதிரி படம்

மாதிரி படம்

குறிப்பிட்ட சமுதாய தலைவர்கள் 10 பேருக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியதாகாவும் அது தொடர்பான ஆவணத்தை கைப்பற்றி இருப்பதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீவிரவாத அமைப்புகளில் இளைஞர்களை சேர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஊக்குவிப்பதாக என்ஐஏ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

  பயங்கரவாத நடவடிக்கைக்கு பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில், எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.

  தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மதுரை, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை நடைபெற்றது.

  Also Read: அதிகரிக்கும் வெப்பம்: தமிழகத்தின் மின் தேவை மீண்டும் அதிகரிப்பு

  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோதனையில் லஷ்கர் -இ-தொய்பா, ஐஎஸ். அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை நிர்பந்திப்பதாக பாப்புலர் பிரண்ட் மீது தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது குற்றச்சாட்டியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கைது செய்யப்பட்ட 45 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது என்ஐஏ அளித்த அறிக்கையில் பிற மதத்தினருக்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமுதாய தலைவர்கள் 10 பேருக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியதாகாவும் அது தொடர்பான ஆவணத்தை கைப்பற்றி இருப்பதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: NIA, Social Democratic Party of India (SDPI), Terrorists