ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம் - விசாரணை குழு அமைத்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம் - விசாரணை குழு அமைத்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

உயிரிழந்த யானை

உயிரிழந்த யானை

"ஒரு மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது"

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்டது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, விசாரித்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  குமரேசன் தெரிவித்தார்.

பின்னர், உத்தரவிட்ட தீர்ப்பாயம் வன விலங்குகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மனிதர்கள் - விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து ஆய்வு செய்யவும், கேரள தலைமை வனக் காவலர் தலைமையில், தென் மண்டல வன விலங்குகள் குற்ற கட்டுப்பாட்டு பிரிவு மூத்த அதிகாரி,  அமைதிப் பள்ளத்தாக்கு வனக்காப்பாளர், மன்னார்காடு மற்றும் புனலூர் மண்டல வன அதிகாரி, பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நீண்டகால செயல் திட்டத்தை சமர்ப்பிக்க இக்குழுவுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அமைதிப் பள்ளத்தாக்கு வனக் காப்பாளர் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு, தகுந்த திட்டங்களை வகுக்க வேண்டும் என உத்தரவிட்ட தீர்ப்பாயம், ஏற்கனவே திட்டம் வகுத்திருந்தால், அது எந்த நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இக்குழு ஒரு மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

யானை கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை, கைது நடவடிக்கைகள் குறித்தும்,  யானையின் மரணத்துக்கு காரணமானவர்களிடம் இருந்து இழப்பீடு வசூல் செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மற்றும் கேரள வனத்துறைக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை வரும் ஜூலை 10ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

Also read... யானை உயிரிழந்த விவகாரத்தில் கேரளாவிற்கு எதிராக நாடு தழுவிய பரப்புரை.. கொந்தளித்த பினராயி விஜயன்: நடந்தது என்ன?


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Also see...

First published:

Tags: Kerala