Home /News /national /

காங்கிரஸுக்கு அடுத்த அதிர்ச்சி.. குஜராத் செயல் தலைவர் ஹர்திக் பட்டேல் திடீர் ராஜினாமா.. பாஜகவில் இணைகிறாரா?

காங்கிரஸுக்கு அடுத்த அதிர்ச்சி.. குஜராத் செயல் தலைவர் ஹர்திக் பட்டேல் திடீர் ராஜினாமா.. பாஜகவில் இணைகிறாரா?

காங்கிரஸுக்கு அடுத்த அதிர்ச்சி.. குஜராத் செயல் தலைவர் ஹர்திக் பட்டேல் திடீர் ராஜினாமா.. பாஜகவில் இணைகிறாரா?

காங்கிரஸுக்கு அடுத்த அதிர்ச்சி.. குஜராத் செயல் தலைவர் ஹர்திக் பட்டேல் திடீர் ராஜினாமா.. பாஜகவில் இணைகிறாரா?

Hardik patel | காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து விலகி உள்ளேன் என ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

    குஜராத்தில் பல மாதங்களாக நடந்து வந்த உட்கட்சிப் பூசல்களுக்கு இடையே, காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக ஹர்திக் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து விலகி உள்ளேன். இதனை சக நிர்வாகிகள் மற்றும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். எதிர்காலத்தில் மாநிலத்தின் நலனுக்காக உழைக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

    குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் படேல் சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என கருதப்படுகிறது. இந்த சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேல் சில ஆண்டுகளுக்கு முன் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ஹர்திக் படேலை 2019ல் கட்சியில் இணைத்தனர். அவருக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    இதையும் படிங்க: கனவு பயத்தால் திருடிய சாமி சிலைகளை திரும்ப ஒப்படைத்த திருடர்கள் - கடவுள் மன்னிக்க கோரி கடிதம்..!!

    சில நாட்களாக காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்த ஹர்திக் படேல், சில நாட்களுக்கு முன்னர், சமூக வலைதளங்களில் இருந்து குஜராத் காங். செயல் தலைவர் என்ற தன் சுய விபரத்தை நீக்கினார். இதனால், அவர் காங்கிரசில் இருந்து வெளியேறலாம் என தகவல் வெளியாகின.

    இந்நிலையில்,இன்று அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறுவது குறித்து அறிவித்துள்ளார். தொடர்ந்து, ஹர்திக் படேல், காங்கிரசில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Congress, Hardik Patel

    அடுத்த செய்தி