வரும் 5 ஆண்டுகள் உலக அரங்கில் இந்தியா இழந்ததை ஈடுசெய்வதற்கான காலகட்டம்: மோடி

மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்பதையொட்டி, அவருக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vaijayanthi S | news18
Updated: May 27, 2019, 10:00 AM IST
வரும் 5 ஆண்டுகள் உலக அரங்கில் இந்தியா இழந்ததை ஈடுசெய்வதற்கான காலகட்டம்: மோடி
மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்பதையொட்டி, அவருக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Vaijayanthi S | news18
Updated: May 27, 2019, 10:00 AM IST
வரும் 5 ஆண்டுகள் உலக அரங்கில் இந்தியா இழந்ததை ஈடுசெய்வதற்கான காலகட்டம் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என தான் கூறிய போது சிலர் கேலி செய்தததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் சென்ற மோடி

மக்களவை தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். அவருடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் சென்றார். அகமதாபாத் விமான நிலையம் சென்றடைந்த இருவரையும் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சர்தார் படேல் சிலைக்கு மோடி மாலை அணிவித்து மரியாதை

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பாஜக அலுவலகத்திற்கு சென்ற மோடிக்கு சாலையின் இருபுறமும் மனிதச்சங்கிலி அமைக்கப்பட்டு கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல்

பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, சூரத் தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க தனக்கு குடியரசு தலைவர் அழைப்புவிடுத்துள்ளதால், பதவியேற்புக்கு முன்னதாக குஜராத் மக்களிடம் ஆசி பெற வந்திருப்பதாகவும் மோடி கூறினார்.
Loading...
வலிமையான அரசு அமைய மக்கள் வாக்களிப்பு

மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது 300 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என தான் கூறியதை பலர் கேலி செய்ததாகவும், ஆனால் வலிமையான அரசாங்கம் அமைய 300 தொகுதிகளுக்கு மேல் பாஜகவிற்கு மக்கள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களின் பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என கூறிய மோடி, உலக அரங்கில் இந்தியா இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் என்றும் உறுதிபடக் கூறினார்.

பொதுக்கூட்டத்தின் நிறைவாக மோடியை நோக்கி பாஜக தொண்டர்கள் தங்களது செல்பேசியில் டார்ச் விளக்கை ஒளிரவிட்டபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தாயார் ஹீரா பென்னுடன் மோடி சந்திப்பு

பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு காந்திநகரில் உள்ள தனது தாயார் ஹீரா பென்னை மோடி சந்தித்தார். அப்போது இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்பதையொட்டி தாயிடம் அவர் ஆசி பெற்றார்.

இன்று வாரணாசிக்கு செல்லும் மோடி

இதைத்தொடர்ந்து தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்லும் மோடி, தன்னை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.

இதனிடையே, மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்பதையொட்டி, அவருக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்ததார்.

அப்போது, நமது பிராந்தியத்தின் அமைதி மற்றும் மேம்பாட்டுக்கு வன்முறை மற்றும் தீவிரவாதம் இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

Also see... தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா தமிழிசை?

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...