பெரும்பான்மையான நகர்ப்புற இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் கிடைக்கும் - News18 சர்வே!

பெரும்பான்மையான நகர்ப்புற இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் கிடைக்கும் - News18 சர்வே!

படம்: AFP

நாம் உண்மையான தடுப்பூசி செயல்முறைக்கு வரும்போது, இந்தியா ஏற்கனவே அதன் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் (Universal Immunization Program) கீழ் ஒரு பரந்த, நிறுவப்பட்ட நெட்ஒர்க்கைக் கொண்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா சிக்கலில் மாட்டி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது உலகம். பல திசைகளில் இருந்தும் தடுப்பூசிகள் கைகொடுக்க ஓடி வந்து  கொண்டிருக்கின்றன. எது முதலில் களத்துக்கு வந்து கை கொடுக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. ஆக்ஸ்ஃபோர்டு - அஸ்ட்ராஜெனேகா, ஃபைசர், மாடர்னா, ஸ்புட்னிக் V ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் வெற்றியை அறிவித்துள்ளன. 2020ம் ஆண்டு கடந்துவிட்டது, 2021ல் அவ்வளவாக தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், உலகெங்கிலும் பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து (USA and the UK) உட்பட பல நாடுகள் தடுப்பூசி செயல்முறையை (vaccination process) தொடங்கியுள்ளன என்பது நம்பிக்கைக்குரிய ஒன்றாக பார்க்கப்பட்டாலும், தடுப்பூசிக்கான எதிர்வினைகள் மற்றும் அலர்ஜிக்கு அஞ்சுவதால் மக்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், தடுப்பூசி சோதனை ஓட்டம் பல மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் மகத்தான பணிக்கு நாட்டு மக்கள் அரசிற்கு ஒத்துழைப்பு அளித்துவருகின்றனர். எது எப்படியோ பழைய இயல்பு நிலைக்கு திரும்புவது விரைவில் சாத்தியமாகும் என்பது தான் அனைவரும் நம்பும் விஷயமாக உள்ளது. 

தடுப்பூசிக்கு இந்தியர்கள் எவ்வளவு சீக்கிரம் பதிலளிக்கப் போகிறார்கள்? NEWS18 உடன் இணைந்து YouGov (YouGov in association with News18) நடத்திய ஒரு ஆய்வில், தொற்றுநோய் நம்மை வீட்டுக்குள் முடக்கியத்திலிருந்தே இந்தியர்கள் தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. 

1015 நகர்ப்புற இந்தியர்கள் இந்த சர்வேக்கு பதிலளித்துள்ளனர். அவர்களிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பெரும்பான்மையான இந்தியர்கள் தடுப்பூசி கிடைத்தவுடன் அந்த ஷாட்டை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். 

கணக்கெடுப்பின்படி, 68% நகர்ப்புற இந்தியர்கள் (urban Indians) இந்த தடுப்பூசி (Vaccination)அனைவருக்கும் கிடைத்தவுடன் அதை போட்டுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். 8% நபர்கள் மட்டுமே தடுப்பூசி எடுப்பதில் தயக்கம் காட்டியுள்ளனர், மேலும் 24% பேர் உறுதியாக தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.  தடுப்பூசி (Vaccination) கிடைப்பதற்கான நிச்சயம் என்ன? இந்த ஆண்டு தொடக்கத்தில் பொது மக்களுக்கு இந்த தடுப்பூசி கிடைக்கும் என்று பெரும்பான்மையான மக்கள் (52% க்கும் மேற்பட்ட மக்கள்) நம்பிக்கை கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 3621 பேர் இந்தாண்டின் நடுப்பகுதியில் தடுப்பூசி (Vaccination) கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். (மே முதல் ஆகஸ்ட் வரை). 

Also read... இன்று வெளியாகிறது GATE 2021 தேர்வுக்கான அட்மிட் கார்டு - பதிவிறக்கம் செய்வது எப்படி?

12% மட்டுமே இந்த ஆண்டின் பிற்பகுதியில் (செப்டம்பர்-டிசம்பர்) கோவிட் -19க்கான தடுப்பூசி (vaccine for Covid-19) அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். முதல் கட்டத்தில், மாஸ்சிவ் வாக்சினேஷன் டிரைவ் (Massive Vaccination Drive) ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகைக்கு ஈடாக இந்தியாவில் பலருக்கு கிடைக்கும். தடுப்பூசியின் முதல் அளவைப் பெற 300 மில்லியன் மக்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. முன்னுரிமைக் குழுவில் (The priority group) 30 மில்லியன் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், இராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள் மற்றும் 270 மில்லியன் பாதிக்கப்படக்கூடிய மக்கள் (health care workers, policemen, soldiers and volunteers, and 270 million vulnerable people) உள்ளனர்.  

2021ல் மாஸ்க்குகள் இல்லாத வாழ்க்கை (Pandemic, Life Without Masks in 2021)

நாம் உண்மையான தடுப்பூசி செயல்முறைக்கு வரும்போது, இந்தியா ஏற்கனவே அதன் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் (Universal Immunization Program) கீழ் ஒரு பரந்த, நிறுவப்பட்ட நெட்ஒர்க்கைக் கொண்டுள்ளது, இது ஆண்டுக்கு சுமார் 55 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும். மாநிலங்கள், மாவட்டங்கள், சிவில் சமூகம், குடிமக்கள் மற்றும் நிபுணர்களின் பங்களிப்பை உள்ளடக்கிய முழு சமூக அணுகுமுறையையும் பின்பற்றி, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்களை (world's largest democratic elections) ஏற்பாடு செய்த அனுபவத்திலிருந்து நாடு இதைச் செய்ய முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) பரிந்துரைத்துள்ளார். "தடுப்பூசி போட வேண்டிய ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசி போடப்படும்" என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் (Health Secretary Rajesh Bhushan) டிசம்பர் 8 அன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: