நியூஸ்18 கருத்துக் கணிப்பு: வேளாண் சட்டங்களுக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு

நியூஸ்18 கருத்துக் கணிப்பு: வேளாண் சட்டங்களுக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு

News18 Farm Reform Survey: நியூஸ்18 நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

News18 Farm Reform Survey: நியூஸ்18 நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் 20 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் குறித்து நியூஸ்18 குழுமம் கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளது. இந்த கருத்து கணிப்பில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 2,412 பேர் பங்கேற்றனர்.

    இந்த கருத்துக் கணிப்பில் 12 கேள்விகள் கேட்கப்பட்டன.

    1.இந்திய விவசாயத் துறையில் சீர்திருத்தம் மற்றும் நவீனம் கொண்டுவருவதை ஆதரிக்கிறீர்களா?

    2.இந்திய விவசாயத் துறை நவீனமடையும் மற்றும் விவசாயிகள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு கூறும் சட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

    3.வேளாண் சட்டங்கள், விவசாயிகள் அவர்களுடைய விளைபொருள்களை அரசின் வேளாண் விளைபொருள் மண்டிக்கு வெளியே விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கிறது என்பது குறித்து உங்களுக்கு விழிப்புணர்வு உள்ளதா?

    4.மண்டிக்கு வெளியே விளைபொருள்களை விற்பதற்கு விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிப்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

    4.புதிய சட்டங்களால் விவசாயிகள் அவர்களது பொருள்களை வெளியே விற்க வாய்ப்பிருப்பதால் அதிக விலையை பெற முடியும் என்று நினைக்கிறீர்களா?

    6.அரசி, கோதுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கும் திட்டம் தொடரும் என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா?

    7.குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும் என்று எழுத்துப்பூர்வமாக எழுதித் தர மத்திய அரசு ஒப்புக்கொண்டதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

    8.மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பதுதான் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையாக இருந்துவருகிறது. வேறு எந்த வாய்ப்புகளையும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களது நிலைப்பாட்டை ஏற்கிறீர்களா?

    9.டெல்லி மற்றும் வட இந்தியாவை மாசுபடுத்தும் வேளான் பயிர் மீதங்களை எரிப்பதை தடை விதிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர். இந்த கோரிக்கை நியாமானதா?

    10.இந்தச் சட்டங்களை எதிர்க்கும் பல எதிர்கட்சித் தலைவர்கள் அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது இதை ஒட்டிய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    11.வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் அரசியல் தூண்டுதலால் நடைபெறுகிறது என்று நினைக்கிறீர்களா?

    12.போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் நேரம் வருமா? என்று 12 கேள்விகள் கேட்கப்பட்டன.

    மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில் பெரும்பாலானவர்கள், வேளாண் திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும். போராட்டம் திரும்பப் பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 56.59 சதவீதம் பேர் இது போராட்டம் கைவிடப்பட வேண்டிய நேரம் என்று தெரிவித்தனர். 53.6 சதவீதம் பேர் புதிய வேளாண் சட்டங்களை ஆதரவு தெரிவிக்கின்றனர். 30.6 சதவீதம் பேர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 15.8 சதவீதம் பேர் கருத்து கூற விரும்பவில்லை.

    48.71 சதவீதம் பேர் இந்தப் போராட்டம் அரசியல் தூண்டுதலால் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளனர். 52.69 சதவீதம் பேர், சட்டங்களைத் திரும்பப் பெறவைப்பதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

    இந்தப் புதிய சட்டங்களால் விவசாயிகள் பலனடைவார்கள் என்று 60.90 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மண்டிகளுக்கு வெளியே விளைபொருள்களை விற்பனை செய்ய அனுமதித்ததற்கு 69.65 சதவீதம் பேர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    குறைந்தபட்ச ஆதார விலைக்கு எழுத்துப்பூர்வ ஒப்பந்தல் அளிக்கும் மத்திய அரசின் முடிவை 53.94 சதவீதம் பேர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விளைபொருள்களின் மீதத்தை எரிக்கத் தடை செய்யும் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவதற்கு 66.71 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேளாண்துறையில் சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாவதற்கு 73.05% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: