Home /News /national /

BYJU’S Young Genius சீசன் 2 : இந்தியாவின் அடுத்த இளம் மேதைக்கான தேடல்

BYJU’S Young Genius சீசன் 2 : இந்தியாவின் அடுத்த இளம் மேதைக்கான தேடல்

BYJU’S Young Genius சீசன் 2

BYJU’S Young Genius சீசன் 2

News18 நெட்வொர்க்கானது BYJU’S Young Genius சீசன் 2 உடன் இணைந்து இந்தியாவின் அடுத்த இளம் மேதைக்கான தேடலைத் தொடங்குகிறது.

  நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் அல்லது மற்றொரு வகையில் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எப்போதாவது ஒரு தருணத்திலாவது விரும்பியிருப்போம். அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் ஒன்றில் அதிகப் புலமை பெற்றிருப்பது நமக்கு நிச்சயமாக உதவியாக இருக்கலாம். ஆனால் மேதைகள் பிறக்கப்படுவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்பதை நாம் அடிக்கடி சிந்திக்கத் தவறிவிடுகிறோம். நமக்குப் பிடித்த கலைஞர்கள் தொலைக்காட்சியில் தோன்றுவதைப் பார்த்து ரசிக்கும் நம்மால் அந்த நபர் மேதை ஆவதற்கு முன் கொண்டிருந்த பேரார்வம் மேற்கொண்ட விடாமுயற்சி மற்றும் பல மணிநேரத் தொடர் பயிற்சியைக் காண முடிவதில்லை.

  எனவே ஒரு குழந்தையின் உண்மையான திறமையை வரையறுப்பது எது? அவர்களின் புத்திசாலித்தனம், இடைவிடா முயற்சி, பேரார்வம், அதிக கற்பனைத் திறன், கண்டுபிடிப்பு மற்றும் அத்துடன் அபாயங்களைப் பயமின்றி மேற்கொள்தல் ஆகியவையே ஆகும். கடந்த வார இறுதியில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில், வறுமைமிக்க பின்னணியில் இருந்து வந்த அற்புதமான தோழர்களால் சர்வதேச அரங்கில் தொடர்ச்சியான அற்புதமான சாகசங்களை நிகழ்ந்த முடிந்ததைக் கண்டு மகிழ்ந்தோம். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ராவின் பேரார்வம் அரியானாவின் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள அவரது கொட்டகையிலிருந்து தோன்றியதே ஆகும். சிக்கலான வாழ்க்கை சூழல்கள், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் போதிய வசதியின்மை ஆகியவற்றைக் கடந்து, ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். பல்வேறு துறைகளில் இத்தகைய திறமையான இளம் திறமைசாலிகளைக் கண்டறிந்து, அடித்தள மட்டத்திலிருந்து அவர்களை வளர்த்து, பொது மேடையில் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இருந்தால், உலகம் சந்தேகத்திற்கு இடமின்றி பயனடையும்.

  அதைத்தான் இந்தியாவின் மிகப்பெரிய செய்தி வலையமைப்பான Network 18 BYJU’S Young Genius தேடல் மூலம் அடையத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியின் விளைவாக எதிர்கால மேதைகளாக மாறக்கூடிய திறன்களைக் கொண்ட இளைஞர்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான தொடர்ச்சியான பணியை மேற்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். சீசன் 1 இளம் சாதனையாளர்கள் News18 எடிட்டர்கள் மற்றும் பிரபலங்களின் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு சேனலில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். லிடியன் நாதஸ்வரம் (15) கண்களை மூடிக்கொண்டு நிமிடத்திற்கு 190 பீட்டுகள் வேகத்தில் பியானோ வாசிப்பது மற்றும் அதீத IQ காரணமாக கூகுள் கேர்ள் ஆஃப் இந்தியா' என்று என்றழைக்கப்படும் மேகாலி மாலபிகா (14) போன்ற மகத்தான திறமையுள்ள குழந்தைகளுடனும் தொடங்கியது. மென்சா சமுதாயத்தின் உறுப்பினரும் பல பயன்பாடுகளை உருவாக்கியவரும் ஒரு புத்தகத்தின் ஆசிரியருமான, ரிஷி ஷிவ் பி (6) நம்பமுடியாத வகையில் IQ 180 ஐ கொண்டுள்ளார்! அவந்திகா காம்ப்ளி (10) 6 இலக்க சதுர ரூட் உலக சாதனையை முயற்சித்து உலக கின்னஸ் சாதனை படைத்த இளைய நபர் ஆவார், திலக் கீசம் (13) ‘பார்களுக்கு அடியிலான தொலைதூர லிம்போ ஸ்கேட்டிங்கை’ முயற்சித்து பார்த்தார். அனுஷ்கா ஜாலி (12) கொடுமைப்படுத்தலுக்கு எதிராக பள்ளிகள் மற்றும் வளாகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அதை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்திருந்தார். அவர் சமூகத் தொழில்முனைவோராகத் திகழ்ந்ததுடன் மிரட்டல் எதிர்ப்புப் படை (ABS) என்ற இணையதளத்தை உருவாக்கினார்.

  சமூக தளங்களில் 98.4% நேர்மறை உணர்வுகளுடனும் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து புதிய அத்தியாயங்களுக்கான நிலையான எதிர்பார்ப்பை உருவாக்கியதன் மூலமும் இந்த பிரத்தியேகத் திறன்வாய்ந்த குழந்தைகள் இந்தியாவில் உள்ள பல இலட்சம் குழந்தைகளுக்கு உத்வேகம் அளித்தனர். முதல் சீசனின் இந்த மகத்தான வெற்றியின் மூலம், News 18 Network ஆனது Young Genius-க்கான தேடலின் இரண்டாவது சீசனில் குழந்தைகளின் பல்வேறு திறன்களை வெளிப்படுத்த உறுதிபூண்டுள்ளது. நிகழ்ச்சி குறித்த விவரங்கள் இதோ;

  சீனியர் Network 18 எடிட்டர் மற்றும் ஆங்கர் ஆனந்த் நரசிம்மன் தொகுத்து வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சி ஜனவரி 2022 இல் தொடங்வதுடன் 11 எபிசோட்களை உள்ளடக்கியிருக்கும், 6 முதல் 15 வயதிற்குட்பட்ட 20 இளம் திறன் வாய்ந்த குழந்தைகளை கலை, கல்வி, தொழில்நுட்பம், வணிகம் , விளையாட்டு மற்றும் பல துறை திறன்களையும் வெளிக்கொணர்ந்து கௌரவிக்கும். இளம் மேதைகளும் இணைந்து இந்தியாவின் புகழ்பெற்ற சில இந்திய ஆளுமைகளும் ஒன்று சேர்ந்து வழங்குவதால் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு அற்புதமான பார்வை அனுபவத்தை வழங்கும்.

  இது குறித்து உங்களுக்கு ஆர்வமிருந்தால் https://www.news18.com/younggenius/ என்னும் தளத்தைப் பார்வையிட்டு பதிவுப் படிவத்தை நிரப்பவும். இந்த ஆரம்பநிலைச் சமர்ப்பிப்புக்குப் பிறகு, பல கட்ட மதிப்பீட்டு செயல்முறைக்கு உதவும் வகையில் குழந்தையின் ஒவ்வொரு விவரத்தையும் பெறுவதற்காக ஒரு விரிவான படிவம் நிரப்பப்பட வேண்டும். அத்துடன், நீங்கள் BYJU இன் செயலியை பதிவிறக்கி BYJU’S Young Genius பிரிவில் பதிவு செய்யலாம்.

  உங்கள் குழந்தையின் திறமையை எவ்வாறு கண்டறிவது என்று நீங்கள் அறிய முயற்சித்தால், அவர்கள் ஆர்வமாக இருக்கும் துறையில் நேரம் செலவிடவும் அதில் அவர்களது திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அனுமதிக்கவும். இந்த தனித்துவமான தளம் சில புத்திசாலித்தனமான இளம் திறமைசாலிகளை அடையாளம் காணவும், எதிர்கால தலைமுறையினர் பெரிய கனவினை காணவும், அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்க தயாராக உள்ளது. நம் ஒவ்வொருவருள்ளும் ஒரு மேதை உறங்கிக் கொண்டிருக்கிறார், Young Genius நிகழ்வின் மூலம், News 18 Network ஆனது நாடு முழுவதும் இளம் திறமைசாலிகள் தங்கள் திறன்களை வெளிக்கொணரும் வாய்ப்பை வழங்கி அவர்களை துயில் எழுப்புவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: BYJU'S, Byju's App, BYJU'S Young Genius

  அடுத்த செய்தி