டிஜிட்டலில் நியூஸ்18 முதலிடம்!

நியூஸ்18

இந்திய அளவில் ஜூன் மாதத்தில் நியூஸ்18 குழுமம் அதிக பார்வையாளர்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

  • Share this:
    தொலைக்காட்சிகளின் பார்வையாளர்கள் பார்வைகளின் விகிதத்தையும், தொலைக்காட்சிகளுக்கு இடையிலான போட்டியும் டி.ஆர்.பி என்ற எண்ணிக்கையின் மூலம் கணக்கிடப்பட்டுவந்தது. அதேபோல, நாளிதழ்களும் எத்தனை அச்சடிக்கப்படுகிறது என்பதைக் கொண்டு கணக்கிடப்படும். அந்த வகையில் இணையதள டிஜிட்டல் ஊடகங்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை காம்ஸ்கோர்(ComScore) எனும் ஊடக அளவீடு மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் கணக்கிட்டு வருகிறது.

    அந்த நிறுவனத்தின் கணக்கீடு மூலம் ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் ஊடகங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது. அந்தவகையில் காம்ஸ்கோர் வெளியிட்டுள்ள ஜூன் மாத ஆய்வு அறிக்கையில் இந்திய அளவில் நியூஸ்18 குழுமம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. நியூஸ் 18 குழுமத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் தளங்களையும் சேர்த்து ஜூன் மாதத்தில் மட்டும் 941 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

    இதே ஜூன் மாதத்தில் டைம்ஸ் குழுமம் 924 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஒரு இணையதளத்தை பயனாளர்கள் பயன்படுத்துவதை அளவிடுதற்கு பார்வைகளைக் (page views) கணக்கிடுவது முக்கியமானது.

    அந்த வகையில் நியூஸ்18 குழுமம் அதிக பார்வைகளைப் பெற்று தேசிய ஊடங்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சக போட்டி ஊடக நிறுவனங்களான ஹிந்துஸ்தான் மற்றும் ஆஜ்தாக் ஊடங்களைவிட இரண்டு மடங்கு பார்வைகளைப் பெற்றுள்ளது. ஹிந்துஸ்தான் நிறுவனம் ஜூன் மாதத்தில் 486 மில்லியன் பார்வைகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆஜ்தாக் 478 மில்லியன் பார்வைகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நியூஸ்18 குழும இணையதளங்களில் அரசியல், விளையாட்டு, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் சிறப்புக் கட்டுரைகள் என பலதரப்பட்ட செய்திகள் இடம்பெறுகின்றன. நியூஸ்18 தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, வங்கம், மலையாளம், கன்னடா, குஜராத்தி, அசாமி, பஞ்சாபி, ஒடியா, உருது என மாநில மொழிகளிலும், ஆங்கில மொழியிலும் செயல்பட்டு வருகின்றன.
    Published by:Karthick S
    First published: