தன் ஜனநாயகக் கடமையை தவறாது ஆற்றிய உலகின் குள்ளமான பெண் ஜோதி அம்கே!

ஜோதி அம்கே உலகின் குள்ளமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவரது உயரம் 62.8 செ.மீ தான்.

Vijay R | news18
Updated: April 11, 2019, 6:57 PM IST
தன் ஜனநாயகக் கடமையை தவறாது ஆற்றிய உலகின் குள்ளமான பெண் ஜோதி அம்கே!
வாக்களித்த பின் ஜோதி அம்கே
Vijay R | news18
Updated: April 11, 2019, 6:57 PM IST
உலகின் குள்ளமான பெண் ஜோதி அம்கே இன்று நாக்பூர் தொகுதியில் வாக்களித்தார்.

இந்தியாவின் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்றது. நாக்பூர் தொகுதியில் உலகின் குள்ளமான பெண் ஜோதி அம்கே வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதி அம்கே, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். முதலில் வாக்களித்த பின் உங்களது இதர பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.ஜோதி அம்கே உலகின் குள்ளமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவரது உயரம் 62.8 செ.மீ தான். ஜோதி அம்கே பல்வேறு திரைப்படங்கள், நாடகங்களில் நடித்துள்ளார். 2012-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்று உள்ளார்.

Also Watch

First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...