முகப்பு /செய்தி /இந்தியா / பிரதமர் நரேந்திர மோடி இரும்பு மனம் படைத்தவர்: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரதமர் நரேந்திர மோடி இரும்பு மனம் படைத்தவர்: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்

யோகி ஆத்யநாத்

யோகி ஆத்யநாத்

ஸ்ரீ நரேந்திர மோடி வலுவான ஆளுமை கொண்டவர்; அவர் ஒரு திறமையான வழிகாட்டி . எதிர்க்கட்சிகளின் தனிப்பட்ட விமர்சனங்கள் அவரை ஒருபோதும் தடுக்கவில்லை, மாறாக உறுதியான முறையில் நாட்டின் நலனுக்கான முடிவுகளை எடுப்பதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உன்னதமான உறுதியான இலக்குகளைத் தேடுவதில் அவருக்கு தைரியம் அளித்தது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

யோகி ஆதித்யநாத்

நரேந்திர மோடி ஜி 2014 இல் "நம்பிக்கை மற்றும் மாற்றம்" என்ற வாக்குறுதியுடன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதைத்தான் கடந்த எட்டு ஆண்டுகளில் அவர் வழங்கியுள்ளார். அவர் ஒரு 'புதிய இந்தியா'வை கற்பனை செய்தார். தனது எண்ணங்கள், செயல்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையால், அவர் நமது நாட்டை வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.

அவரது வல்லமைமிக்க செயல்களின் விளைவாக, உலக அரசியலில் இந்தியா ஒரு சக்திவாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியின் படைப்பாற்றல் மற்றும் ஆளுமை காரணமாக அசாதாரண காலங்களில் சாத்தியமற்றதை சாத்தியமாக்குவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.135 கோடி நாட்டு மக்களின் உணர்வுகள் மற்றும் அபிலாஷைகள் புதிய இந்தியாவை உருவாக்குவதில் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு இந்தியனும் மன உறுதியுடன் முன்னேறிச் செல்ல அவர் ஊக்குவித்து வழிகாட்டுகிறார்.

இந்தியாவின் குஜராத்தின் மேற்கு மாகாணத்தில் உள்ள சிறிய நகரமான வாட்நகரில் பிறந்த மோடியின் சவால்களை வாய்ப்புகளை மாற்றும் குணம், 135 கோடி மக்களின் விருப்பங்களில் ஒன்றாக போனது.  குருகுலத்தில் கல்வி கற்று, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பள்ளியில் பயிற்சி பெற்ற மோடி, அடல் பிஹாரி வாஜ்பாயால் ஈர்க்கப்பட்டார்.

கடந்த 22 ஆண்டுகளாக, ஒட்டுமொத்த தேசமும் அவரது சித்தாந்தம், அவரது வேலை பாணி, அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கம் ஆகியவற்றுக்கு சாட்சியாக உள்ளது. குஜராத்தின் முதலமைச்சராக, அவர் ‘அதிர்வுமிக்க குஜராத்’ மற்றும் ‘வளர்ச்சி மற்றும் நல்லாட்சி’ (குஜராத் மாதிரி) மாதிரியை நாடு முழுவதும் முன்வைத்தார், இது பல மாநிலங்களுக்கு வளர்ச்சியின் முன்மாதிரியாக மாறியது.

இதை படிங்க: பிரதமர் மோடியின் கீழ் வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட புதிய இந்தியா: அமித் ஷா புகழாரம்

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா நீண்ட காலமாக வகுப்புவாதம் மற்றும் திருப்திப்படுத்தல் கொள்கையால் பாதிக்கப்பட்டு, 'அனைத்தையும் உள்ளடக்கிய' தலைமைக்கான விருப்பத்தை இழந்தது. ஒருபுறம், சுரண்டப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் மிகக் கீழ்நிலையில் இருந்த மக்கள் நீண்ட காலமாக உயர்வின் பாதையைத் தேடிக்கொண்டிருந்தனர், மறுபுறம், உலக எஜமானரின் பழைய அபிலாஷையை நாடு பிடித்துக் கொண்டது.

துப்புரவு மற்றும் தூய்மை இந்தியாவின் வளர்ச்சிக்கு வலுவான ஊக்கியாக மாறும் என யாராவது நினைத்தீர்களா? மகாத்மா காந்திக்குப் பிறகு இதை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் கடந்த ஏழு-எட்டு ஆண்டுகளில், முழு நாடும் அது நிஜமாக்குவதைப் பார்க்கிறது. 'வறுமையை அகற்று' என்பது பல தசாப்தங்களாக ஒரு கருப்பொருளாக இயங்கி வருகிறது, ஆனால் வறுமை இன்னும் இருந்தது. ஏன்? ஏனெனில் கோஷங்கள் மட்டுமே உருவாக்கப்படுகிறது, வேலைகள் எதுவும் செய்யப்படவில்லை. இத்தகைய வேலைக்கான தொடக்கம் பிரதமர் மோடி தலைமையில் உருவாக்கப்பட்டது.

JAM Trinity (அதாவது ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் ஆகிய மூன்றின் மூலம்) ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் முடிவு செய்தார், மேலும் அரசாங்கத்தின் திட்டங்களின் பலன்களை ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் நேரடியாக எடுத்துச் சென்றார். இதன் முடிவு வெளிப்படையாக நம் கண் முன்னே உள்ளது.

நம் நாட்டில் அமைதியான சமூக-பொருளாதார புரட்சி இங்கிருந்து தொடங்கியது.  இந்தியாவின் மீது உண்மையான அன்பும் இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றும் திறனும் உள்ள ஒருவரால்தான்,அனைவருக்கும் வீடு, ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம், அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, உலகளாவிய சுகாதார வசதிகள் மற்றும் தூய்மை போன்ற கனவுகளை காணமுடியும்.

பிரதமர் நரேந்திர மோடி இதைச் செய்துள்ளார், அவர் உண்மையிலேயே இந்த  நூற்றாண்டின் மனிதனின் உருவமாக  பிரதிபலிக்கிறார். பஞ்சம்ருத், சுஜலம் சுபலாம், சிரஞ்சீவி, மாத்ரி-வந்தனா, கன்யா களவாணி போன்ற திட்டங்களின் மூலம் குஜராத்தில் முதல்வராக மோடி ஜியால் தொடங்கப்பட்ட சமூகம் மற்றும் மாநிலத்தின் மறுமலர்ச்சி செயல்முறை இப்போது புதிய இந்தியாவை உருவாக்கும் வடிவத்தில் முன்னேறி வருகிறது.

இதை படிக்க: Exclusive: மோடி சிறுவயதிலிருந்தே கடின உழைப்பாளி, படிப்பில் திறமையானவர்: சகோதரர் பேட்டி

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா, பேட்டி பச்சாவ்-பேட்டி படாவோ போன்ற முயற்சிகள் ‘புதிய இந்தியாவை’ கட்டமைப்பதில் மைல்கற்களாக நிரூபித்து வருகின்றன, அதே நேரத்தில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் பொருளாதார சீர்திருத்தங்களில்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் தொடங்கப்பட்ட தங்க நாற்கர சாலை மற்றும் நதிகள் இணைப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கையிலெடுத்தார். நமது கடற்கரை பகுதி முன்னேற்றத்தின் களமாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் ‘சாகர்மாலா திட்டம்’.

ஸ்ரீ நரேந்திர மோடி வலுவான ஆளுமை கொண்டவர்; அவர் ஒரு திறமையான வழிகாட்டி . எதிர்க்கட்சிகளின் தனிப்பட்ட விமர்சனங்கள் அவரை ஒருபோதும் தடுக்கவில்லை, மாறாக உறுதியான முறையில் நாட்டின் நலனுக்கான முடிவுகளை எடுப்பதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உன்னதமான உறுதியான இலக்குகளைத் தேடுவதில் அவருக்கு தைரியம் அளித்தது.

2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் அரசியல் மற்றும் சமூகத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றம் இதற்குச் சான்றாகும். பண்பாட்டு மற்றும் ஆன்மிகத் தேசியம் இப்போது முதன்முறையாக இந்தியாவின் தேசிய அரசியலில் தகுதியான இடத்தைப் பெற்றுள்ளது, முழு உலகமும் இந்தியாவை போற்றுதலுடன் பார்க்கிறது. இதற்கான பெருமை ஸ்ரீ நரேந்திர மோடியின் ஆளுமை மற்றும் தலைமைத்துவத்தையே சாரும்.

மேலும் படிக்க: Exclusive: விவசாயிகளை வலுப்படுத்தும் மோடி சர்க்கார்: மத்திய அமைச்சர் நரேந்திர தோமர்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பகவான் ஸ்ரீராமரின் மகிமையாலும், மகாத்மா புத்தரின் செய்திகளாலும் தீர்மானிக்கப்பட்ட பரிமாணங்களைத் தொடுவதில் பண்பாட்டு தேசியவாதம் 2014ம் ஆண்டுக்கு பின்னர் வெற்றி அடைந்துள்ளது. இவை இன்றும் பல நாடுகளின் பாரம்பரியங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளில் காணப்படுகிறது.

ஜப்பான் பிரதமர் இந்தியா வந்து கங்கை அன்னையின் ஆரத்தியில் கலந்துகொள்வது சாதாரண விஷயமாக இருக்க முடியாது. அரபு நாட்டில் பிரமாண்டமான கோவில் ஒன்று உருவாவது சாதாரண ராஜதந்திரத்திற்கு உதாரணமாக இருக்க முடியாது. உலக வல்லரசுகள் எந்த முடிவையும் எட்ட இந்தியாவையே எதிர்நோக்குகின்றன. இவற்றையெல்லாம்  சாதாரண இராஜதந்திரத் திறனின் விளைவாகக் கருத முடியாது. ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது.

நாட்டின் நலன் கருதி பிரதமர்  பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். ஆனால், அப்படிப்பட்ட எந்த ஒரு முடிவையும் நாட்டு மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது அவைகளால் மக்களை சமாதானப்படுத்த முடியவில்லை என்றால் அதை திரும்பப் பெற அவர் தயங்கியது இல்லை.  இது பொது உணர்வு மற்றும் ஜனநாயகத்தின் அழகுக்கான மரியாதையின் சிறந்த கலவையாகும். மிகவும் கடினமான சூழ்நிலையிலும், பொது நலன் சார்ந்த பணிகளைச் செய்வதில் வெற்றி பெற்றார்.

2020-21 ஆம் ஆண்டில், நாடு கோவிட் -19 இன் கொடூரங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தபோது, ​​நாட்டில் 'வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம்' பற்றி கவலைப்படும் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்திய அரசாங்கம் ஒரு பாதுகாப்புக் கவசத்தை வழங்கியது மட்டுமல்லாமல், உதவியையும் நீட்டித்ததை அனைவரும் பார்த்தார்கள். உலகின் பிற நாடுகளுக்கு இந்தியா உதவியது.  பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி நட்பின் இலக்கணமாக இந்தியா திகழ்ந்தது.

சர்வதேச அரசியலில், இந்தியர்களும்  உலகின் பிற நாடுகளில் வாழும் இந்தியர்களும் பெருமை கொள்ளும் அளவுக்கு இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தினார். இன்று உலகம் சந்தித்து வரும் நெருக்கடிக்கு தீர்வு காணவும், உலக அமைதியை நிலைநாட்டவும் இந்தியாவின் முன்முயற்சிகளுக்காக உலக வல்லரசுகளும் காத்திருக்கின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது அத்தியாயத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் பிரிவு 35-A மற்றும் பிரிவு 370 ஆகியவை  இந்தியாவின் வளர்ச்சிக்கு தடைகளாக இருந்தன. இதைப் பற்றி இந்தியர்களின் மனதில் எப்போதும் குற்ற உணர்வு இருந்தது. இந்த இரண்டு சட்டப்பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் தனி யூனியன் பிரதேசங்களாக புதிய அடையாளத்தைப் பெற்றிருப்பது பிரதமரின் வலுவான விருப்பத்தின் விளைவாகும்.

இந்தியாவின் கலாச்சார வளர்ச்சியின் அடையாளமான ஸ்ரீராமரின் பிரமாண்ட கோவில் அயோத்தியில் உருவாகி வருகிறது. காசி விஸ்வநாத் தாமின் புராதனச் சிறப்பு, நவீனம் மற்றும் புராணங்களுடன் காசிக்குத் திரும்பியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் ‘தூய்மை’ ஒரு பங்கேற்பாளராக மாறியுள்ளது. உயிர் கொடுக்கும் அன்னை கங்கை தூய்மையாகி, இந்திய மக்களுக்குப் பெருமை தருகிறாள்.

ரேஷன் உட்பட அரசின் பல திட்டங்களின் பலன்களைப் பெற்று, கடைசி வரிசையில் நிற்கும் நபரும் தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் முன்னேறி வருகிறார்.  சமூகம் மற்றும் தேசத்தின் வளர்ச்சியில் பெண் சக்தி மரியாதை, பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கையுடன் பங்கேற்பாளராக மாறி வருகிறது.

‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ ஆகியவற்றுடன் இந்தியா தன்னிறைவு பெற்றதன் ஒரு பார்வை இது, இப்போது ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றின் வலுவான அடித்தளம் பெருமைப்படுத்துகிறது. இந்தியா இணக்கமாகவும், வலுவாகவும், தன்னம்பிக்கை மிக்கதாகவும் மாறுவது வரலாற்றின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும், இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.

ஸ்ரீ நரேந்திர மோடி ஜி பலத்தால் அல்லாமல், மாறாக, நமது பன்முகத்தன்மையின் வலிமையைப் பயன்படுத்தி  நாட்டை வழிநடத்தினார், இது மக்கள் இலட்சியங்களால் ஒற்றுமையாக இருக்க முடியும் என்பதைக் காட்டியது.  நமது நலன்கள் மற்றும்  இலட்சியங்களுக்கு இடையிலான தவறான தேர்வை அவர் நிராகரித்தார். அவர் உண்மையிலேயே இரும்பு மனம் படைத்தவர்.

பொறுப்புத் துறப்பு: யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதல்வர். ஆசிரியரின் கருத்துக்கள் தனிப்பட்டவை.

top videos

    தமிழில் - மா.முருகேஷ்

    First published:

    Tags: PM Narendra Modi, Yogi adityanath