#MissionPaani தண்ணீர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்! நியூஸ்18 உடன் இணையுங்கள்

மிகக் கடுமையான கொடுமையான கோடைக் காலம் கடந்திருக்கும் நிலையில், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரின்றி வறண்டுள்ளது.

news18
Updated: July 1, 2019, 9:37 PM IST
#MissionPaani தண்ணீர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்! நியூஸ்18 உடன் இணையுங்கள்
மாதிரிப் படம்
news18
Updated: July 1, 2019, 9:37 PM IST
தூய்மையான தண்ணீர் இல்லாமல் ஆண்டுக்கு இரண்டு லட்சம் இந்தியர்கள் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு துளி நீரும், விலைமதிப்பற்றது. நீர் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக, நியூஸ் 18 குழுமம் சார்பாக #MissionPaani (தண்ணீர் இயக்கம்) என்ற விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. நம் எதிர்கால சந்ததிகளுக்கு தண்ணீர் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்காக #Missionpaani விழிப்புணர்வு பிரசாரத்துடன் இணைந்திடுங்கள்.

மிகக் கடுமையான கொடுமையான கோடைக் காலம் கடந்திருக்கும் நிலையில், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரின்றி வறண்டுள்ளது. ஒரு துளி நீரை கண்டடைவதற்கு, ஏராளமானோர் பல கி.மீ தூரம் அலைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தண்ணீர் பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துவதற்காக, நியூஸ் 18 குழுமம் சார்பாக, #Missionpaani இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தியாவில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 6% அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாம் விழித்தெழவில்லையென்றால், 2030-ம் ஆண்டில் 40 சதவீத இந்தியர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.

ஒவ்வொரு துளி நீரும் விலை மதிப்பற்றது. தண்ணீர் பிரச்னையின் நம் கவனத்தை செலுத்துவோம். ஒவ்வொரு துளி நீரையும் சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம், தண்ணீர் பாதுகாப்பையும், அனைத்து இந்தியருக்கும் நல்ல நீர் கிடைப்பதை உறுதிபடுத்த முடியும்.

நீர் ஆதாரங்களை பாதுகாப்போம்... நல்ல நீரை எதிர்கால சந்ததிகளுக்கு உறுதிப்படுத்துவோம்...
First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...