• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ATM முதல் LPG வரை.. மார்ச் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்..

ATM முதல் LPG வரை.. மார்ச் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்..

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

PG சிலிண்டர் விலைகள், பெட்ரோல் டீசல், ATM-களில் இருந்து பணம் எடுக்கும் விதிகள் போன்ற பல மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன

  • Share this:
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பல விதிமுறைகள் மார்ச் 1, 2021 (திங்கள்) முதல் மாறப்போகின்றன. இந்த விதிகளில் LPG சிலிண்டர் விலைகள், பெட்ரோல் டீசல், ATM-களில் இருந்து பணம் எடுக்கும் விதிகள் போன்ற பல மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், இந்த மாற்றங்கள் எவ்வாறு செயல்படும் என்பதையும் அவை உங்கள் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கின்றன என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (Oil Marketing Companies (OMCs)) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய கட்டணங்களை அறிவிக்கின்றன. இருப்பினும், பிப்ரவரியில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் விலைகள் மூன்று முறை திருத்தப்பட்டுள்ளன. தற்போது, 14.2 கிலோ சிலிண்டரின் விலை தேசிய தலைநகரான டெல்லியில் ரூ .794 ஆகவும், கொல்கத்தாவில் ரூ .745.50 ஆகவும், சென்னையில் ரூ .735 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை மாற்றங்கள் :

எரிபொருள் விலைகள் தினசரி திருத்தப்படுகின்றன, ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் அடிக்கடி எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. இருப்பினும், குளிர்காலம் முடிவடைய இருப்பதால் நாட்டில் விலை குறையும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். "சர்வதேச சந்தையில் பெட்ரோலிய விலை அதிகரிப்பு, நுகர்வோரையும் பாதித்துள்ளது. இது ஒரு சர்வதேச விஷயம், தேவை அதிகரிப்பதால் விலை அதிகமாக உள்ளது. இப்போதுள்ள வின்டர் சீசன் முடிவடைய இருப்பதால் விலையும் குறைந்துவிடும்,” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

SBI வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாகும் KYC:

மார்ச் 1 முதல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை ஆக்டிவாக வைத்திருக்க விரும்பினால், அவர்களின் KYC ஐ முதலில் கம்ப்ளீட் செய்யவேண்டும் கூறியுள்ளது.

INDIAN Bank ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டு கிடைக்காது:

மார்ச் 1 முதல், இந்தியன் வங்கி ஏடிஎம்களில் இருந்து ரூ .2,000 நோட்டுகளை வாடிக்கையாளர்கள் எடுக்க முடியாது. இருப்பினும், அவர்கள் வங்கி கவுண்டரிலிருந்து நோட்டுகளை திரும்பப் பெற முடியும். "ஒருவேளை ஏடிஎம்களில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை வாடிக்கையாளர்கள் எடுத்தால் வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு சென்று அவற்றை சில்லறைகளாக மாற்றுகின்றனர். இது உண்மையில் கொஞ்சம் கஷ்டமான செயல் தான். அதைத் தவிர்ப்பதற்காக, ஏடிஎம்களில் ரூ .2,000 நோட்டுகளை ஏற்றுவதை உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளோம், ”என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளின் IFSC குறியீட்டில் மாற்றம்:

விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவை BoB-ல் இணைக்கப்பட்ட பின்னர், இரு வங்கிகளின் IFSC குறியீடுகளும் மார்ச் 1, 2021 முதல் மாற்றப்படும். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் பழைய IFSC குறியீட்டைக் கொண்டு பரிவர்த்தனை செய்ய முடியாது. 31 மார்ச் 2021 க்குள் வாடிக்கையாளர்கள் புதிய MICR குறியீட்டைக் கொண்டு செக் புக்களைப் (Cheque books) பெறலாம் என்றும் பாங்க் ஆப் பரோடா கூறியுள்ளது. விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை பாங்க் ஆப் பரோடா (BoB) உடன் இணைப்பது ஏப்ரல் 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் பின்னர், தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியின் வாடிக்கையாளர்கள் பாங்க் ஆப் பரோடாவின் வாடிக்கையாளர்களாக மாறினர்.

PNSCயின் IFSC குறியீடும் இணைப்பிற்குப் பிறகு மாறும்:

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) IFSC தொடர்பான விதிகளிலும் மாற்றங்களைச் செய்து வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் பழைய வங்கிகளான ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் பழைய காசோலை (Cheque) மற்றும் IFSC அல்லது MICR குறியீட்டை மாற்றப்போகிறது. பழைய குறியீடுகள் மார்ச் 31 வரை செயல்படும் என்றாலும், புதிய குறியீடுகளைப் பெறுமாறு வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் இப்போது கூறிவருகிறது, இல்லையெனில் பின்னர் சிக்கல்கள் ஏற்படும் என்றும் கஸ்டமர்களை அலர்ட் செய்துள்ளது.

டோல் பிளாசாக்களில் இலவச FASTag கிடைக்காது:

பிப்ரவரி 16 முதல் நாடு முழுவதும் FASTag கட்டாயமாகிவிட்டது. FASTag இல்லாமல் டோல் பிளாசாவிலிருந்து புறப்படும் எந்த வண்டியிடமிருந்தும் இரட்டை கட்டணம் வசூலிக்கப்படும். மார்ச் 1 முதல், வாடிக்கையாளர்கள் டோல் பிளாசாக்களிலிருந்து FASTag வாங்க ரூ .100 செலுத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.

மார்ச் 1 முதல் பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்:

மார்ச் 1 முதல் ஹோலிக்கு முன்பு பல ரயில்களை இயக்கப் போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் பீகார் பயணிகளுக்கு இந்த சிறப்பு ரயில்களால் அதிகபட்ச ரிலீப் கிடைக்கும். இது தவிர, மேற்கு ரயில்வே 11 ஜோடி ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது, அதாவது 22 புதிய சிறப்பு ரயில்களை வெவ்வேறு பாதைகளில் இயக்க முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் டெல்லி, மத்திய பிரதேசம், மும்பை உள்ளிட்ட பல வழித்தடங்களில் இயக்கப்படும். சில ரயில்கள் ஏற்கனவே இயக்கத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், சில ரயில்கள் 1 மார்ச் 2021 அதாவது இன்று முதல் இயக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: