நியூஸ்18 கருத்துக் கணிப்பு! இந்தி மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் பா.ஜ.க

மத்தியப் பிரதேசத்தில் 29 மக்களவைத் தொகுதிகளும், மஹாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகளும், குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகளும், ராஜஸ்தானில் 25 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன.

news18
Updated: May 19, 2019, 9:40 PM IST
நியூஸ்18 கருத்துக் கணிப்பு! இந்தி மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் பா.ஜ.க
காங்கிரஸ், பா.ஜ.க
news18
Updated: May 19, 2019, 9:40 PM IST
நியூஸ் 18 நிறுவனம் ஐ.பி.எஸ்.ஓ.எஸ்(IPSOS) நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தி மாநிலங்களில் பா.ஜ.க மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று தெரிகிறது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. மத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடியதாக இந்தி மாநிலங்கள் என்று அழைக்கப்படும், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஆகிய மாநிலங்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன.

அதில் மத்தியப் பிரதேசத்தில் 29 மக்களவைத் தொகுதிகளும், மஹாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகளும், குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகளும், ராஜஸ்தானில் 25 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இந்த நான்கு மாநிலங்களிலும், காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. மஹாராஷ்டிராவைப் பொறுத்தவரையில், தேசியவாத காங்கிரஸும், சிவசேனாவும் முக்கிய பிரதான கட்சிகளாக உள்ளன.

நியூஸ்18 நிறுவன கருத்துக் கணிப்பின்படி, மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் பா.ஜ.க 24-26 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3-5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிகிறது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பா.ஜ.க 22-24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2-3 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி 42-45 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 4-6 தொகுதிகளிலும் வெற்றி என்று தெரிகிறது. குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் பா.ஜ.க 25-26 தொகுதிகளிலும் காங்கிரஸ் 0-1 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, காங்கிரஸ், பா.ஜ.க நேரடியாக மோதும் இந்தி மாநிலங்களில் பா.ஜ.க பெறும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் 2014-ம் ஆண்டு தேர்தலைப் போலவே படுதோல்வியைச் சந்திக்கும் என்று தெரிகிறது.

Also see:
Loading...
First published: May 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...