திருமணம் நடந்த 5 நாட்களில் 19 வயது இளம் பெண் மரணம்: கொரோனாவால் ஏற்பட்ட உயிர்பலி? அதிர்ச்சியில் பகுதிவாசிகள்..

கணவருடன் உயிரிழந்த ஸ்ரீவானி.. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படம்..

புதுமணப்பெண் ஸ்ரீவானி திடீரென மயக்கம் அடைந்து தரையில் சாய்ந்தார். அவர் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

  • Share this:
கொரோனா தொற்றால் நாடு முழுவதும் பல்வேறு இன்னல்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த கொரோனா தொற்று பரவல் தற்போது இரண்டாம் அலையாக உருவெடுத்து ஈவு இரக்கமின்றி பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

ஏறக்குறைய பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கிற்குள் மீண்டும் சென்றுவிட்டதால் பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை தொலைத்து வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில் திருவிழாக்கள் நடத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டாலும் கூட விதிமுறைகளை பின்பற்றி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திருமணங்கள், உள்ளிட்ட இல்ல விஷேசங்களை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இது போதாத காலம் என நினைத்து தள்ளிப்போட முடியாத திருமணங்களை வழக்கமான உற்சாக கொண்டாட்டங்கள் இன்றி சிம்பிளாக குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டு நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வாரம் இப்படி ஒரு திருமணம் மிகுந்த சந்தோஷத்துடன் நடத்தப்பட்டது, ஆனால் அந்த திருமண வீடு இன்று துக்க வீடாக மாறியிருக்கிறது. 19 வயதே ஆன அந்த இளம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அடுத்த 5 நாட்களில் அவர் உடல்நிலை குன்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவானி என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு தண்டூர் எனும் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று (மே 14) திருமணம் நடைபெற்றது. குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டதால் மிகவும் சந்தோஷத்துடன் அன்றைய தினம் இரவு அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இரவு உணவை சாப்பிட்டனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அங்குள்ள கோவில் ஒன்றுக்கு சென்று அபிஷேகம் செய்துவிட்ட புதுமண ஜோடி இருவரும் வீடு திரும்பியிருக்கின்றனர். இதன் பின்னர் இருவரும் வீடு திரும்பிய நிலையில் புதுமணப்பெண் ஸ்ரீவானி திடீரென மயக்கம் அடைந்து தரையில் சாய்ந்தார். அவர் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்பட்டதால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

Read More:   வைரல் வீடியோ : முறிந்து விழுந்த மரத்திலிருந்து எஸ்கேப் ஆன பெண்!

திருமணப் பந்தல் கழற்றும் முன்பாகவே அதே பந்தலை இளம் பெண்ணின் மறைவுக்கும் பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டது குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே உயிரிழந்த ஸ்ரீவானிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது. இருப்பினும் ஸ்ரீவானிக்கு திருமணத்திற்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் முடிவில் அவருக்கு நெகட்டிவ் என வந்ததும் என உறவினர்கள் கூறுகின்றனர். மேலும் தங்களின் மகள் தூக்கமின்மை காரணமாக ரத்தக்கொதிப்பில் உயிரிழந்ததாக அவருடைய பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Read More:  ஊரடங்கை மீறி ஊர் சுற்றியவர்களுக்கு விநோத தண்டனை - ராஜஸ்தான் போலீஸ் நடவடிக்கை!

ஸ்ரீவானியின் உயிரிழப்புக்கு காரணம் எதுவாக இருந்தாலும் திருமணம் நடைபெற்ற ஐந்தே நாட்களில் அவர் உயிரிழந்தது கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: