Home /News /national /

தேங்காய் உடைத்ததற்கே விரிசல்விட்ட சாலை: எம்.எல்.ஏ. அதிர்ச்சி

தேங்காய் உடைத்ததற்கே விரிசல்விட்ட சாலை: எம்.எல்.ஏ. அதிர்ச்சி

சாலையில் விரிசல்

சாலையில் விரிசல்

உத்தரப் பிரதேசத்தில் புதிதாக போடப்பட்ட சாலையை  திறந்துவைக்கும் விதமாக தேங்காய் உடைத்தபோது தேங்காய்க்கு பதிலாக சாலையில் விரிசல் ஏற்பட்டது. சாலையில் இருந்து கற்கள் சிதறியது.

    உத்தர பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவின்போது தேங்காயை உடைத்தப்போது  புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் விரிசல் விழுந்தது அங்கிருந்தோரை அதிர்ச்சி அடைய செய்தது.

    உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நூர் பகுதியில், 7.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இதற்காக  அரசு தரப்பில் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகளின் ஒரு பகுதி நிறைவுப் பெற்று நேற்று (டிசம்பர் 3) சாலையின் திறப்புவிழா நடைபெற்றது.

    சதர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ சுசி சவுத்ரி  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தேங்காயை உடைத்து சாலையை  திறந்து வைக்க முயன்றார். தேங்காய் சாலையில் பட்டப்போது தேங்காய்க்கு பதிலாக சாலையில் விரிசல் ஏற்பட்டது. சாலையில் இருந்து கற்கள் சிதறியது. இதனால் சுசி சவுத்ரி அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருவதற்காக அவ்விடத்திலேயே மூன்று மணிநேரம் காத்திருந்த அவர், அதிகாரிகள் வந்து சிதறிய பாகங்களை ஆய்வுக்கு எடுத்து சென்றப் பின்னர் புறப்பட்டு சென்றனர். சாலை மோசமாக அமைக்கப்பட்ட விவகாரம் குறித்து தான் மாவட்ட  ஆட்சியரிடம் பேசியிருப்பதாகவும், சாலை போதுமான தரத்துடன் அமையவில்லை என்று புகார் கூறியிருப்பதாகவும்,  தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: Omicron: இந்தியாவில் 3-வது நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது


    அதேவேளையில், பிஜ்னோரின் நீர்ப்பாசனத் துறையின் செயல் பொறியாளர் விகாஸ் அகர்வால், சாலை அமைப்பதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் படிக்க: மம்தா பாணியில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விளாசிய அகிலேஷ் யாதவ்
    Published by:Murugesh M
    First published:

    Tags: UP, Uttar pradesh

    அடுத்த செய்தி