பிறந்த குழந்தையை கொலை செய்து சடலத்தை மருத்துவமனையின் கழிவறை ஜன்னலில் கட்டி வைத்த கொடூரம்!

Murder

கொல்லப்பட்ட குழந்தை வீட்டிலேயே பிரசிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியான மருத்துவர் சந்தோஷ் தெரிவித்தார்.

  • Share this:
பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையை ஈவு இரக்கமின்றி கொலை செய்ததுடன், சடலத்தை மருத்துவமனையின் கழிவறை ஜன்னலில் கட்டி வைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இருக்கும் காவல்துறையினர் விசாராணை நடத்தி வருகின்றனர்.

பிறந்த குழந்தையை கொல்வதென்றால் நிச்சயம் கல்நெஞ்சத்துடன் இருப்பவராக தான் இருக்க வேண்டும். பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையை ஈவு இரக்கமின்றி கொலை செய்ததுடன் சடலத்தை கழிவறை ஜன்னலில் கட்டி வைத்து சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏறப்டுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்பல்லபூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி அரசு பொது மருத்துவமனையின் கழிவறையில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பிறந்த குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருப்பதை நேற்றிரவு மருத்துவமனை ஊழியர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்து, மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்த்த போது மருத்துவமனையின் கழிவறை ஜன்னலில் அடர்த்தியான நூலை பயன்படுத்தி குழந்தையின் சடலத்தை கட்டி வைத்திருந்ததை பார்த்தனர்.

Also Read:   பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள்!

பிறந்து ஒரு நாள் பெண் குழந்தை மட்டுமே இருக்கும் என கூறப்படும் நிலையில் அது ஒரு பெண் குழந்தையாகும். அக்குழந்தையின் தொப்புள் கொடி கூட கத்திரிக்கப்படாமல் இருந்துள்ளது.

Also Read:  ஏமாற்றுவதும், கட்சி மாறுவதும் அரசியலில் சகஜம்: காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஓபன் டாக்!

சிக்பல்லபூர் காவல் உதவி ஆணையர் லதா கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த மருத்துவமனையில் 6 குழந்தைகள் பிறந்ததாகவும், அந்த 6 குழந்தைகளும், அவற்றின் தாய்மார்களும் நலமுடன் இருக்கின்றனர் எனவும் கொல்லப்பட்ட குழந்தை வீட்டிலேயே பிரசிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியான மருத்துவர் சந்தோஷ் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், கொல்லப்பட்ட குழந்தையை சுடிதார் அணிந்த பெண் ஒருவரும், அவரின் அருகில் மேலும் ஒரு பெண் நடந்து செல்வதையும் கண்டறிந்துள்ளனர். தற்போது இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சியில் உள்ள பெண்கள் இருவரையும் தேடி வருவதாக காவல்துறையினர் கூறினார்கள்.
Published by:Arun
First published: