மிராஜ் விமானத்தின் பெயரை குழந்தைக்கு சூட்டிய பெற்றோர்!

நேற்று இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானப்படை குண்டுகளை வீசிச்சென்றதாக கூறப்படுகிறது.

மிராஜ் விமானத்தின் பெயரை குழந்தைக்கு சூட்டிய பெற்றோர்!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: February 28, 2019, 6:56 AM IST
  • Share this:
பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை புகுந்து தாக்குதல் நடத்திய அதிகாலை நேரத்தில் பிறந்த குழந்தைக்கு மிராஜ் சிங் என்று அக்குழந்தையின் பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஊடுருவிய இந்திய விமானப்படை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பயங்கவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, நேற்று இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானப்படை குண்டுகளை வீசிச்சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்திய விமானி ஒருவரை கைது செய்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


இந்நிலையில், பாலகோட் அதிரடி தாக்குதலுக்கு மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட அதிகாலை 3.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் தாப்ரா கிராமத்தை சேர்ந்த மகாவீர் சிங், சோனம் சிங் தம்பதிக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளது.

மிராஜ் 2000 போர் விமானத்தின் நினைவாக தங்களது குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோர் என்று மகாவீர் சிங் தம்பதி பெயர் சூட்டியுள்ளனர்.

Also See....
First published: February 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading