Home /News /national /

புத்தாண்டு கொண்டாட்டம்: சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் புதுச்சேரி

புத்தாண்டு கொண்டாட்டம்: சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் புதுச்சேரி

புதுச்சேரியில் 2020 புத்தாண்டை  கொண்டாடுவதற்காக புதுச்சேரியில் சுற்றுப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

புதுச்சேரியில் 2020 புத்தாண்டை  கொண்டாடுவதற்காக புதுச்சேரியில் சுற்றுப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

புதுச்சேரியில் 2020 புத்தாண்டை  கொண்டாடுவதற்காக புதுச்சேரியில் சுற்றுப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. 

கர்நாடகா, கேரளா, ஆந்திரா,  மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையிலிருந்து புத்தாண்டு வரை புதுச்சேரியில் தங்குவதற்காக சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால்  சுற்றுலா தலங்களில்  சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் காண முடிகிறது.

புதுச்சேரியில் நட்சத்திர விடுதிகள், நடுத்தர ஹோட்டல்கள், கடற்கரை ரிசாா்ட்கள் என 300 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட அறைகள் உள்ளன.  100 சதவீத அறைகளும் நிரம்பி விட்டன.

புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் எவ்வித சிரமுமின்றி கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக  போக்குவரத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்தில்  அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 1500  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 பறக்கும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள்  மூலம்  சுற்றுலாத்தலங்கள் கண்காணிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Yuvaraj V
First published:

Tags: New Year Celebration

அடுத்த செய்தி