ஹோம் /நியூஸ் /இந்தியா /

விடிய விடிய மதுபானம்.. டிசம்பர் 31ல் ரூ.107 கோடிக்கு மது விற்பனை.. குடித்துக் கொண்டாடிய கேரள மது பிரியர்கள்!

விடிய விடிய மதுபானம்.. டிசம்பர் 31ல் ரூ.107 கோடிக்கு மது விற்பனை.. குடித்துக் கொண்டாடிய கேரள மது பிரியர்கள்!

கேரளா

கேரளா

டிசம்பர் 22 முதல் 31ஆம் தேதி வரை மொத்தமாக 690 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

புத்தாண்டு நேற்று முன்தினம் பிறந்த நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி மாலை முதலே இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கின. கேரளாவில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர். மதுக் கடைகளும், பார்களும், நட்சத்திர விடுதிகளும் நிரம்பி வழிந்தன. இந்த நிலையில் கேரளாவில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் ரூ.100 கோடி அளவுக்கு மது விற்பனையாகி உள்ளது. கேரள அரசின் புள்ளி விவரங்கள்படி, டிசம்பர் 31ஆம் தேதி மட்டும் 107 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது தெரியவந்தது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விழாக் காலமான டிசம்பர் 22 முதல் 31ஆம் தேதி வரை மொத்தமாக 690 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31ஆம் தேதி அதிகபட்சமாக திருவனந்தபுரத்திலுள்ள பவர் ஹவுஸ் சாலையிலுள்ள மதுக்கடையில் 1.12 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. கேரள அரசு நடத்தும் விற்பனையாகாத சில குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள மதுக்கடைகளில் கூட 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகவே மது விற்பனையாகி உள்ளது. இந்த பகுதிகளில் இவ்வளவு ரூபாய்க்கு விற்பனையாகும் என தாங்களே எதிர்பார்க்கவில்லை என அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

மது பாட்டில்களின் இருப்பு அதிகளவில் இருந்ததும், போக்குவரத்து வசதி காரணமாகவும், கள்ளச்சாராயத்தை தடுக்க கலால் துறை எடுத்த நடவடிக்கை காரணமாகவும் இவ்வளவு ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. மது விற்பனையான 690 கோடியில் சுமார் 600 கோடி ரூபாய் வரை அரசின் வரி மற்றும் இதர செலவினங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

First published: