முகப்பு /செய்தி /இந்தியா / கியூஆர் கோடு வசதியுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை - தேர்தல் ஆணையர் தகவல்!

கியூஆர் கோடு வசதியுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை - தேர்தல் ஆணையர் தகவல்!

புதிய வாக்காளர் அடையாள அட்டை

புதிய வாக்காளர் அடையாள அட்டை

வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறினார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, ''புதிய வாக்காளர் அட்டையில் க்யூஆர் கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெறும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட உள்ளது. இதுவரை வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட 'ஹோலோகிராம்' இனி அட்டைக்குள்ளையே ஒட்டப்படும்.

அடையாள அட்டை முன்புறம், வாக்காளரின் புகைப்படமும், அவரது 'நெகட்டிவ் இமேஜ்' போன்ற படமும் இடம்பெறும். போலியான அட்டைகள் உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் என அவர் பேசினார்.

First published:

Tags: Voters ID