ஹோம் /நியூஸ் /இந்தியா /

வளர்ப்பு நாய் மற்றவர்களை கடித்தால் ரூ.10,000 அபராதம் - அதிரடி உத்தரவு

வளர்ப்பு நாய் மற்றவர்களை கடித்தால் ரூ.10,000 அபராதம் - அதிரடி உத்தரவு

செல்லப் பிராணிகள் வளர்க்கக் கெடுபிடி போட்ட நொய்டா நகரம்

செல்லப் பிராணிகள் வளர்க்கக் கெடுபிடி போட்ட நொய்டா நகரம்

நொய்டா நகரில் இனி செல்லப்பிராணிகளை வளர்க்கப் பலத்த கெடுபிடிகள் நொய்டா மேம்பாட்டு வாரியத்தால் போடப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா நகரில் நொய்டா வாரியம் செல்லப்பிராணிகள் வளர்ப்பிற்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். அதனை மீறுபவருக்குப் பெரிய அளவிலானத் தொகை அபராதமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த சனிக்கிழமை அன்று நொய்டா மேம்பாட்டு வாரியத்தின் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் அதிகரித்து வரும் செல்லப்பிராணிகளால் அடுத்தவருக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றிப் பேசப்பட்டது. வீட்டில் செல்லமாய் வளர்க்கும் நாய் மற்றும் பூனை போன்ற பிராணிகள் அடுத்தவரைக் கடிக்கும் செயல் சமீபகாலமாகவே அதிகரித்துள்ளது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  நாய் கடிப்பதால் ஏற்படும் நோயால் (rabies)மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்குத் தீர்வுகாணும் வகையில் நொய்டா நகரம் அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

  இனி நகரில் நாய் அல்லது பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்தால் கண்டிப்பாக அதனைப் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அதற்கு அபராதமாக ரூ.2000 விதிக்கப்படும். அதே போல் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி யாரையாவது கடித்தால் அதற்கு அபராதமாக ரூ.10,000 விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் செல்லப்பிராணிகளைப் பதிவு செய்யக் கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும். காலக்கெடுவை மீறுபவருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

  செல்லப்பிராணிகளை வளர்க்க விதிமுறைகள்:

  செல்லப்பிராணிகளுக்குச் சரியான முறையில் சிகிச்சை செய்து தடுப்பூசி போட்டிருக்கிற வேண்டும். வெளிப்பகுதியில் வைக்கும் உணவு இடங்களுக்கு உரிமையாளர் தான் பொறுப்பு மற்றும் செல்லப்பிராணிகள் யாரையாவது கடித்தால் அவர்களுக்கான மருத்துவச் செலவிற்கும் உரிமையாளர் தான் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த விதிமுறைகளை மீறுபவருக்கு மாதம் ரூ.2000 அபராதமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : ரயில் பாதையில் எந்த மஞ்சள் கோடு நீளமானது.? 10 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் தான் அதிபுத்திசாலி.!

  உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி உலகம் முழுவதும் நாய் கடிப்பதால் ராபிஸ் என்ற நோயால் சுமார் 20,000 பேர் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். அதில் 36% இறப்புகள் இந்தியாவில் நிகழ்கிறது. 2021 ஆண்டில் மட்டும் சுமார் 17 லட்சம் நாய்க் கடி வழக்குகள் பதிவாகியுள்ளது.

  நொய்டாவிற்கு அடுத்த இந்தியாவில் கேரளா மாநிலத்தில் தான் அதிகப்படியான நாய்க் கடி வழக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Janvi
  First published:

  Tags: Bite, Dog, Pet animals