உள்நாட்டு பயணிகள் விமான சேவை தொடங்க உள்ளதை அடுத்து பயணிகளும் விமான நிலையங்களும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு பயணிகள் சேவை வரும் 25-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாட்டில், “விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும்.
பயணிகள் அனைதவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படும்.
பயணிகள் அனைவரும் ஆரோக்ய சேது செயலியை பதவிறக்கம் செய்திருக்க வேண்டும். அதில் கொரோனா தொற்று இல்லை என்று பதிவாகி இருக்க வேண்டும். 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆரோக்ய சேது செயலி கட்டாயமில்லை.
பெரிய அளவிலான சூட்கேஸ்கள் மற்றும் உடமைகளுக்கு அனுமதியில்லை. அண்மையில் விமான போக்குவரத்து மேற்கொண்ட விவரத்தை அளித்திட வேண்டும்.
விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் மருத்துவ உபகரண ஆடை அணிந்திருக்க வேண்டும். பயணிகள், ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
விமான நிலையங்களில் பயணிகளின் சமூக இடைவெளியை வெளிப்படுத்தும் விதமாக இருக்கைகள் இருந்திட வேண்டும்.
ஒய்வறைகளில் செய்திதாள் மற்றும் பத்திரிகைகளை வழங்க கூடாது.
மாநில அரசு மற்றும் நிர்வாகம் பயணிகளுக்கு கால் டாக்ஸி மற்றும் போக்குவரத்தை உறுதி செய்திட வேண்டும்.
அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா தனிமை முகாம்கள் அமைத்திட வேண்டும். சமூக இடைவெளி குறித்து பயணிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.