நாடு முழுவதும் 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள்! புதியபாதைக்குத் தயாராகும் இந்திய ரயில்வே துறை

நாடு முழுவதும் 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள்! புதியபாதைக்குத் தயாராகும் இந்திய ரயில்வே துறை
கோப்புப் படம்
  • Share this:
நாடு முழுவதும் 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. இந்த ரயில்களை இயக்க 20க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ‘தேஜாஸ் ரயில் போல நிறைய தனியார் ரயில்கள் இயக்கப்படும். மேலும், பட்ஜெட்டில் புதிய ரயில்வே பாதைக்காக 12,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே துறை தயாராகிவருகிறது.

ஹூண்டாய், சீமென்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும், டாடா, அதானி போன்ற இந்திய நிறுவனங்களும் தனியார் ரயில்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளன.


மும்பை - புது டெல்லி, சென்னை - புது டெல்லி, புது டெல்லி - ஹவுரா போன்ற வழித்தடங்களில் இயக்கப்படவிருக்கும் இந்த ரயில்களில் 16 பெட்டிகள் இருக்கும் என்றும், அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் இவை இயக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also see:
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்