கேரளாவில் வசிக்கும் தமிழர், கன்னடர்களுக்கு புதிய வாய்ப்புகள்!

பினராயி விஜயன்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்பட வேண்டும்.

  • Share this:
மொழி சிறுபான்மையினருக்கு சலுகை அளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷன் அறிக்கையால், கேரளாவில் வசிக்கும் தமிழர், கன்னடர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

கேரளாவில், மொழி சிறுபான்மையினர் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும், அது குறித்து அரசுக்கு பரிந்துரை வழங்கவும் திருவனந்தபுரம் ‘திராவிட மொழிகளுக்கான சர்வதேச பள்ளி’யின் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப் பட்டது. அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு தரப்பினர் கருத்துக்களை கேட்டறிந்து,  பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில், மொழி சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில், அவர்கள் பேசும் மொழியைத் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அப்பகுதியில் அனைத்து அரசு அறிவிப்புகளும், தமிழ், கன்னடத்தில் வெளியிடப்பட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்பட வேண்டும். என கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், கேரள மாநிலத்தில் வசிக்கும் அணைடை மாநில மக்களின் சிரமங்கள் நிச்சயம் குறையும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில், புலம் பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அண்டை மாநிலங்களுக்குச் சென்று பணிபுரிவது தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவில் இருப்பதைப் பார்க்க முடிகின்றது. இதனால், மொழியைப் புரிந்து கொள்வதில் அதிக சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே அண்டை மாநிலத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

மேலும், அண்டை மாநில மக்களுடனான நல்லிணக்கத்திற்கும், சகோதர உறவுக்கும் இத்தகைய போக்குகள் வழிவகை செய்யும். தென்னிந்திய மக்களின் கலாச்சாரத்திலும் வழ்வியலிலும் மிகவும் நெருங்கிய ஒற்றுமைகள் இருப்பதைப் பார்க்க முடிகின்றது. அண்டை மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் மக்களின் சிரமங்களை களைந்து அவர்களை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மாநிலங்களின் முக்கிய கடமையாக உள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தின் இந்த செயல்பாடு பிற மாநிலங்களும் ஓர் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

Must Read : தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பாராட்டிய மத்திய பிரதேச அமைச்சர்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கேரள மாநிலத்தில், ஆங்காங்கே குழுவாகத் தங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தேயிலைத் தோட்டத் தொழில்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சங்க காலத்தில் கேரளா, ‘சேரநாடு’ என்று அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: