Home /News /national /

Omicron | தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய 'ஒமிக்ரான்' கொரோனா வேரியண்ட் - அதிவேகமாக பரவும் என WHO எச்சரிக்கை

Omicron | தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய 'ஒமிக்ரான்' கொரோனா வேரியண்ட் - அதிவேகமாக பரவும் என WHO எச்சரிக்கை

ஒமிக்ரான் வைரஸ்

ஒமிக்ரான் வைரஸ்

புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது .தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது.

    உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய பகுதிகள் வழியாக வருவோரை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பால் ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள புதிய வகை கொரோனா, கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. எனினும், கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து வீரியமாக பரவி வருவதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.அவ்வகையில், புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

    தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட வைரஸ், அங்கு 6 பேருக்கும், போட்ஸ்வானாவில் 3 பேருக்கும், ஹாங்காங்-கில் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று, ஐரோப்பாவில் முதலாவதாக பெல்ஜியத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

    Also Read: புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் : மாநிலங்களுக்கு மத்திய சுகாதார துறை எச்சரிக்கை

    இதனைத் தொடர்ந்து, இந்த மூன்று நாடுகள் வழியாக வருவோருக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளுமாறு மாநில சுகாதாரத் துறை செயலாளர்களை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவோருக்கும் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதேபோல, சீனா, தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வருவோருக்கு கட்டுப்பாடு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    உருமாற்ற வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புதிய வகை கொரோனா குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது

    Also Read: பி 1.1.529 : புதிய வகை கொரோனா வைரஸால் கதி கலங்கும் ஐரோப்பா... விமானங்கள் அதிரடி ரத்து

    இந்த புதிய வகை வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தடுப்பூசி போட்டவர்களுக்கும் நோய் தாக்குதலுக்கு ஆளாவார்கள் என மருந்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி, புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன், இத்தாலி, ஜெர்மன் அரசுகள் தற்காலிகமாக ரத்து செய்து பயணக் கட்டுப்பாடுகளை விதித்து 6 நாடுகளை சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளன.

    இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்கா, புதிய வகை கொரோனா குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டன் அவசர அவசரமாக தேவையற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ள தென்னாபிரிக்காவுக்கு, மற்ற நாடுகள் தடை விதித்தால் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் சுணக்கம் ஏற்படும் என்றும் அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.

    கோவிட்-19 இன் நான்கு மாறுபாடுகளான ஆல்பா , பீட்டா , காமா மற்றும் டெல்டா ஆகியவற்றை கவலைப்படத்தக்கவை என உலக சுகாதார மையம் வகைப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், பி.1.1.529 மாறுபாடும் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆபத்தானவை என பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் நுழையும் சர்வதேச பயணிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி