• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தந்தங்களையும் சேர்த்தே எரிக்க வேண்டும்...! ஆந்த்ராக்ஸ் நோய் பாதித்த யானைகளின் உடலை கையாள வழிமுறைகள் வெளியீடு

தந்தங்களையும் சேர்த்தே எரிக்க வேண்டும்...! ஆந்த்ராக்ஸ் நோய் பாதித்த யானைகளின் உடலை கையாள வழிமுறைகள் வெளியீடு

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆந்த்ராக்ஸ் நோய் பாதித்து இறந்த யானைகளின் உடலை கையாள்வதற்கான வழிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி ஆந்த்ராக்ஸ் பாதித்து இறந்த யானைகளின் உடல்களை எக்காரணம் கொண்டும் மண்ணில் புதைக்கக் கூடாது என்றும், உரிய முறையில் அதே இடத்தில் உடலை எரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

    இறந்த யானை உடலை எரிப்பதற்கு முன்பு நீரில் 10 சதவீதம் ஃபார்மலின் கலந்து உடல் முழுவதும் தெளிக்க வேண்டும்,  உடலை எரித்த இடத்திலிருந்து 50 மீட்டர் சுற்றளவிற்கு முற்றிலுமாக தரையை எரித்திருக்க வேண்டும், எரித்த இடத்திலிருந்து 50 மீட்டர் சுற்றளவிற்கு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும், யானைகளின் தந்தங்களையும் சேர்த்தே எரிக்க வேண்டும் போன்ற வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இறந்த யானையை கையாளும்போது பயன்படுத்திய உபகரணங்களை ஃபார்மலின் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும், ஆறு மாதம் கழித்து அந்த இடத்தை சோதனையிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: