ஹோம் /நியூஸ் /இந்தியா /

மத ரீதியான மக்கள் தொகை சமநிலை அவசியம் - RSS தலைவர் மோகன் பகவத் பேச்சு

மத ரீதியான மக்கள் தொகை சமநிலை அவசியம் - RSS தலைவர் மோகன் பகவத் பேச்சு

மோகன் பகவத்

மோகன் பகவத்

இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாடு தான். கட்டாய மதமாற்றத்தை தடுத்து மதம் சார்ந்த மக்கள் தொகையை சமநிலையில் வைக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Nagpur, India

  மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மத ரீதியாக மக்கள் தொகை சமநிலை என்பது புறக்கணிக்க முடியாத விவகாரம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

  ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் தசரா திருவிழா நடத்தப்படும். இதில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்துவார்கள் மேலும் அதன் தலைவர் தொண்டர்களுக்கு உரையாற்றுவார். அவ்வாறு இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் நடத்திய தசரா விழாவில் அதன் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், “சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பும் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டுவிட்டது. சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என கணித்துள்ளனர்” என கூறினார்.

  இதையும் வாசிக்க: தேசிய அரசியலில் களமிறங்கிய கேசிஆர்.. முதல் இலக்கு கர்நாடகா.. கட்சி பெயர் மாற்றம்..

  மேலும், “இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாடு தான். கட்டாய மதமாற்றத்தை தடுத்து மதம் சார்ந்த மக்கள் தொகையை சமநிலையில் வைக்க வேண்டும். இல்லையென்றால் தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலை உருவாகும். மக்கள் தொகை அதிகரித்தால் அது சுமையாக மாறும். மேலும் கட்டாய மதமாற்றமும், ஊடுருவலும் பெரும் பிரச்னையாக இருக்கிறது” என கூறினார்.

  தொடர்ந்து பேசிய அவர், “வாழ்க்கையிலும் தொழிலிலும் சிறக்க ஆங்கிலம் முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக்கொள்கை மாணவர்களை பண்பட்டவர்களாகவும் தேச பக்தி கொண்டவர்களாகவும் மாற்றும். இதனை அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Mohan Bhagwat, Population, RSS