சிவகாசியில் தயாரான பசுமைப் பட்டாசுகள் அறிமுகம்!

  • Last Updated :
  • Share this:
சிவகாசியில் தயாரான பசுமைப் பட்டாசுகளை டெல்லியில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகப்படுத்தினார்.

சங்கு சக்கரம், சாட்டை, கம்பி மத்தாப்பு, சிறிய அணுகுண்டு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றை சிவகாசியைச் சேர்ந்த ஸ்டாண்டர்ட் மற்றும் பாலாஜி நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

மாசைக் குறைக்கும் பசுமைப் பட்டாசுகளையே விற்கவும், பயன்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய முறைப்படி இந்த பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

முதல் முறையாக பசுமைப் பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூழலில் வரும் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளையே பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் ஹர்ஷவர்தன் கேட்டுக்கொண்டார்.

பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவதால், காற்றில் மாசு கலப்பது 30% குறையும் என்று கூறப்படுகிறது.

Published by:Yuvaraj V
First published: