ஹோம் /நியூஸ் /இந்தியா /

டார்கெட் 2030: டெல்லி விமான நிலையத்தில் ஏற்படப்போகும் முக்கிய மாற்றம்

டார்கெட் 2030: டெல்லி விமான நிலையத்தில் ஏற்படப்போகும் முக்கிய மாற்றம்

மின்சாரமயமாகும் டெல்லி சர்வதேச விமான நிலையம்

மின்சாரமயமாகும் டெல்லி சர்வதேச விமான நிலையம்

Replacing EVs in delhi airport: மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 1,000 டன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும். DIAL அறிக்கையின்படி, இந்த வாகனங்கள் 3-4 மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், பசுமைப் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் அதன் விமான நிலைய  நடவடிக்கைகளுக்காக அடுத்த நான்கு மாதங்களில் 62 மின்சார வாகனங்களை (EVs) அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை  தில்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்த மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 1,000 டன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும். DIAL அறிக்கையின்படி, இந்த வாகனங்கள் 3-4 மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும்.

ஏற்கனவே தலைநகர் டெல்லியில் கரிமில வாயு வெளியேறுவதைக் குறைக்க மின்சாரத்தில் இயங்கும் ஊர்திகள், ரிக்ஷாக்கள் பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. அது மட்டுமின்றி டெல்லியில் மின்சாரத்தில் இயங்கும் 1500 பேருந்துகளை இயக்க கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. மே இறுதியில் 150 பேருந்துகள் செயல்படத் தொடங்கி விட்டது.

இந்நிலையில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதன் அருகாமையில் பசுமை போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், DIAL, அசல் உபகரண உற்பத்தியாளர்களுடன் (OEM) விமான நிலைய-தனித்துவ உபகரணங்களை நிறுவுவதற்கு மின்னூர்திகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்காக விமான நிலைய பங்குதாரர்களுடன்  பேச்சுவார்த்தை நிகழ்த்தி வருகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு அசத்திய கிராமத்தினர்

இந்த வாகனங்களுக்கான ஆற்றல் தேவை மற்றும் பிற விமான நிலைய பங்குதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டெல்லி விமான நிலைய முக்கிய இடங்களில் உயர் மின்னழுத்தம் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் நிலையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய DIAL இன் CEO, விதே குமார் ஜெய்ப்ரியார், "2030-க்குள் டெல்லி விமான நிலையத்தை நிகர சுழிய  கார்பன் வெளியேற்றும் விமான நிலையமாக மாற்ற DIAL முடிவெடுத்துள்ளது. இந்த இலக்கை அடைய தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. டெல்லி விமான நிலையத்திலிருந்து படிப்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் எண்ணிக்கையை மின்சார வாகனங்களைக் கொண்டு மாற்ற இத்திட்டம் உதவும். விமான நிலைய செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கு மின்சார வாகனங்களை பயன்படுத்துவதே எங்கள் திட்டத்தின் முதல் படி. இது இந்திய விமான நிலையங்களில் மின்சார வாகனமுறையில் மாற்றும் முதல் முயற்சியாகும். மேலும் அதற்கேற்ற உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும்" என்றார்.

கார்பன் வெளியேற்றத்தைச் சமாளிக்க முருங்கை, வேம்பு மரங்களை நட வேண்டும்: மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்

மேலும், DIAL தனது 100 சதவீத மின்சாரத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெறவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்த வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மின்சாரமும் மாசுபடாதது என்பதை உறுதி செய்யும் என்றார்.

தற்போது, ​​முனையம் 3ல் இருந்து பயணிகள் போக்குவரத்து மையக் (PTC) கட்டிடத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மின்சார பேருந்துகளைப் பயன்படுத்த வசதி செய்துள்ளது DIAL நிறுவனம். இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே 20 நிமிட இடைவெளியில் இந்த பேருந்துகள் இயங்கி வருகின்றன.

2030 ஆம் ஆண்டுக்குள் "நிகர ஜீரோ கார்பன் எமிஷன் ஏர்போர்ட்" (NZCEA) ஆக DIAL மாற இந்த முயற்சிகள் உதவும் என நம்புகின்றனர். மின்சார ஆற்றல் திறன், ஆற்றல் பாதுகாப்பு, பசுமை கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு ஆகிவற்றை மேம்படுத்தும் பணிக்கான திட்டங்களையும் DIAL வகுத்து வருகிறது.

First published:

Tags: Delhi Airport, Electric Buses, Greenhouse gas, World Environment Day