• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முல்லை பெரியாறு: புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதி

முல்லை பெரியாறு: புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதி

முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணை

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கையை தயார் செய்ய நிபந்தனைகளுடன் கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கையை தயார் செய்யுமாறு, கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள 123 ஆண்டுகால முல்லை பெரியாறு அணையை, தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை காரணம் காட்டி புதிய அணைக் கட்டும் முயற்சியில் கேரளா அரசு தீவிரம்காட்டி வருகிறது.

இந்த புதிய அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கையை தயார் செய்ய நிபந்தனைகளுடன் கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகமும், கேரளமும் இணைந்து எடுக்கும் முடிவின்படியே புதிய அணை கட்ட முடியும் என்றும் இதற்காக தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் அவசியம் என்றும் நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், முல்லை பெரியாறு அணை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதேசமயம், ஆய்வறிக்கை தயார் செய்ய வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி, அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி முழுவதும் கிடைத்துவிட்டது என்பது தவறானது. இந்த புதிய அணை கேரள மாநிலம் பீர்மேடு தாலுகாவுக்கு உட்பட்ட மஞ்சுமலை கிராமத்தில் அமைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணையின் உயரம் 174.6 அடியாகவும், நீளம் 1,214 அடியாகவும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: