புதிதாக பரவத் தொடங்கியுள்ள ஏஒய் 4.2(Covid variant AY.4.2) வகை கொரோனா வேகமாக பரவும் தன்மை உடையது என்று ஐசிஎம்ஆர் விஞ்ஞானி டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார். எனினும் இந்த வகை கொரோனாவால் உயிரிழப்பு குறைவாகவே ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஏஒய் 4.2 கொரோனா வகை ( Covid variant AY.4.2) கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 17 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
AY.4.2 என்பது கோவிட்- தொற்று ஏற்பட காரணமான SARS-CoV-2 வைரஸின் டெல்டா மாறுபாட்டின் துணைப் பரம்பரையாகும். அதே சமயம் இந்தியாவில் புழக்கத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக டெல்டா தொடர்கிறது.
ஏஒய் 4.2 கொரோனாவின் தன்மை குறித்து ஐசிஎம்ஆர் விஞ்ஞானி டாக்டர் சமிரன் பாண்டா நியூஸ்18 ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “புதிய டெல்டா வேரியண்ட் மிகவும் பரவக்கூடியதாகத் தெரிகிறது, ஆனால் அது ஆபத்தானது அல்ல. இத்தகைய வைரஸ் தான் வாழ்வதற்காக அதிக மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், இந்த வகை கொரோனா வீரியம் மிக்கதாக இருக்கும் என்று சொல்வது கடினம்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக பீதியை கிளப்பக் கூடாது என்று கூறியுள்ள அவர், விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். AY.4.2 இன் ஏழு மாதிரிகள் ஆந்திராவில், இரண்டு கர்நாடகாவில், இரண்டு தெலங்கானாவில், நான்கு கேரளாவில், ஜம்மு & காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒன்று கண்டறியப்பட்டன.
இதையும் படிங்க: ஆண்- பெண் இடையேயான திருமணத்துக்கு மட்டுமே அங்கீகாரம்: மத்திய அரசு
பிரிட்டனில் இந்த வகை கொரோனா அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.