முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவில் பரவி வரும் புதிய கொரோனா..! மீண்டும் லாக்டவுன் வருமா..?

இந்தியாவில் பரவி வரும் புதிய கொரோனா..! மீண்டும் லாக்டவுன் வருமா..?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உங்கள் குழந்தை அல்லது குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சுயமாக மருந்து எடுத்து கொள்வது அல்லது உங்களுக்குத் தேவையில்லாத மருந்துகளைப் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தை தரும்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சீனாவில்மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் 25 மில்லியன் குடியிருப்பாளர்களில் பாதி பேர் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது சீனா முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இது இந்தியா போன்ற பல்வேறு நாடுகளையும் பாதித்து வருகிறது.

கொரோனா பாதுகாப்பு :  சீனா, பிரேசில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளில் கொரோனா பரவல் என்பது திடீரென்று அதிகரித்து வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் தற்போது மேற்கொண்டு வருகிறது. சீனாவில் சமீபத்தில் கொரோனாவின் புதிய அலை காரணமாக ஏற்படும் அபாயகரமான விளைவுகள் மற்ற அனைத்து நாடுகளிலும் தலைப்புச் செய்திகளை உருவாக்கியுள்ளது. எனவே கொரோனா இன்னும் முடியவில்லை என்பதே எல்லோரின் உணர்வாக தற்போது உள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் சீனாவில் சுமார் 1.5 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

நிபுணர்கள் சொல்வது என்ன ?  குருகிராமில் உள்ள பராஸ் மருத்துவமனையில் தலைமை மருத்துவரான ஷிகா குலியா கூறுகையில், “கொரோனா பரவலின் திடீர் அதிகரிப்பு காரணமாக, மக்கள் கூட்டம் நிரம்பிய இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்துகொண்டும் அல்லது கூட்டங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறார். மேலும், வெளிநாட்டுப் பயணத்தைத் தவிர்ப்பது அல்லது சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவரிடம் இருந்து தள்ளி இருப்பது ஒரு முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். உள்நாட்டு போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்தை தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மற்றொரு கொரோனா அலை வருமா ?

கொரோனாவின் புதிய அலையை என்பது புதிய சுவாச அறிகுறிகளுடன் வரலாம் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில், புதிய வைரஸ் மாறுபாட்டால் அதிக பாதிப்புகள் உண்டாகலாம். மேலும், இந்த நேரத்தில் நாம் இதனை எதிர்த்து போராட தயாராக இருக்க வேண்டும். இந்த முறை ஒரு புதிய அலை உருவாகி பொது முடக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இவை, எல்லாவற்றிற்கும் மேலாக, பயம் கொள்ளவோ அல்லது வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இவை நல்லதை விட தீமையையே நமக்கு தரும் என்றும் கூறியுள்ளார். உங்கள் குழந்தை அல்லது குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சுயமாக மருந்து எடுத்து கொள்வது அல்லது உங்களுக்குத் தேவையில்லாத மருந்துகளைப் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தை தரும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

27-28% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ்களை இதுவரை எடுத்துக்கொண்டு உள்ளனர். சீனாவைப் போன்று கடுமையான விளைவுகளைத் தவிர்க்க, முகமூடிகளை கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் பூஸ்டர் டோஸ்களை எடுக்க கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து பயணம் செய்யும் சர்வதேச பயணிகளின் சீரற்ற மாதிரிகள் விமான நிலையங்களில் சோதிக்கப்படும். சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளதால், தனிநபர்கள் முகமூடிகளை அணிவதையும், சானிடைசர்களை பயன்படுத்துவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

First published:

Tags: Corona, Corona impact, Covid-19 vaccine