எருமை கொம்பை பாலிஷ் செய்வதிலும் ஊழல்! லாலு பிரசாத் அரசு மீது புதிய குற்றச்சாட்டு

1990-லிருந்து 1996-ம் ஆண்டு வரை, லாலு பிரசாத். முதலமைச்சராக இருந்த காலத்தில், மாட்டுத்தீவனம் வாங்கியதில், சுமார் ₹900 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றது.

Web Desk | news18
Updated: July 28, 2019, 10:18 PM IST
எருமை கொம்பை பாலிஷ் செய்வதிலும் ஊழல்! லாலு பிரசாத் அரசு மீது புதிய குற்றச்சாட்டு
லாலு பிரசாத் யாதவ்
Web Desk | news18
Updated: July 28, 2019, 10:18 PM IST
எருமை மாட்டு கொம்புகளை பாலிஷ் செய்வதற்கு ₹ 17 லட்சம் எண்ணெய் வாங்கியதாக பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் அரசு மீது புதிய குற்றச்சாட்டு விழுந்துள்ளது.

கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில், சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் பீகார் மாநில மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்.

1990-லிருந்து 1996-ம் ஆண்டு வரை, லாலு பிரசாத். முதலமைச்சராக இருந்த காலத்தில், மாட்டுத்தீவனம் வாங்கியதில், மிகப் பெரிய அளவுக்கு ஊழல் நடைபெற்றது.


இந்நிலையில்,  நிதிஷ் குமார் தலைமையிலான அரசின், விசாரணையில் தற்போது புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், வெறும் ₹ 10 கோடி மட்டுமே கால்நடைத் தீவனம் தேவைப்பட்ட நிலையில், ₹ 253 கோடி தீவனம் வாங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி எருமை மாட்டு கொம்புகளை பாலிஷ் செய்வதற்கு மட்டும், ₹ 17 லட்சம் மதிப்பில் 49,950 லிட்டர் கடுகு எண்ணெய் வாங்கியதும் தெரியவந்துள்ளது.

Loading...

வழக்கமாக மாட்டுத் தீவனங்களில் கலப்பதற்கு 10% மக்காச்சோளம் மட்டுமே தேவைப்படும் நிலையில், 115 மடங்கு அதிகமாக, ₹ 154 கோடிக்கு வாங்கியுள்ளதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

அதேபோல், 15% பாதாம் எண்ணெய் கேக்குகள் தேவைப்படும் நிலையில், அதைவிட 33 மடங்கு அதிகமாக, ₹7.5 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி விவசாயிகள் இல்லாமலும், மாடுகளும் இல்லாமலும், வெறும் ஆவணங்களில் மட்டுமே போலியாக காண்பித்து அரசு கருவூலத்தில் இருந்து பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது.

மேலும், 1995-96 ஆண்டு காலகட்டத்தில், ₹ 116 கோடி அரசு கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பணம் எங்கு சென்றது என்பதற்கு எந்த ஆவணமும் இல்லை எனவும் அரசு கூறியுள்ளது.

Also watch: டிக்டாக் குற்றங்களின் கதை!

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...