பிரதமர் மோடி தலைமையில் இன்று புதிய அமைச்சரவை கூட்டம்!

புதிய அரசின் கொள்கைகள், திட்டங்கள், பட்ஜெட் போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: May 31, 2019, 7:52 AM IST
பிரதமர் மோடி தலைமையில் இன்று புதிய அமைச்சரவை கூட்டம்!
பிரதமர் மோடி
Web Desk | news18
Updated: May 31, 2019, 7:52 AM IST
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம், இன்று நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். இதையடுத்து, அமைச்சரவையின் முதல் கூட்டம், இன்று மாலை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரை தொடங்கும் தேதி குறித்து விவாதிக்கப்படுகிறது.


முதல் கூட்டத் தொடரில், புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர். முதல் கூட்டத் தொடர், ஜூன் 6-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமைச்சரவை பதவியேற்புக்குப் பின் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமித் ஷா, புதிய இந்தியாவுக்கான அஸ்திவாரம் போடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் புதிய அரசின் கொள்கைகள், திட்டங்கள், பட்ஜெட் போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... தொலைபேசியில் பேசிய நேசமணி! என்ன சொன்னார் தெரியுமா?

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...