ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதியில் ரூ.23 கோடி செலவில் காணிக்கை பணத்தை கணக்கிட புதிய கட்டிடம் திறப்பு..

திருப்பதியில் ரூ.23 கோடி செலவில் காணிக்கை பணத்தை கணக்கிட புதிய கட்டிடம் திறப்பு..

திருப்பதி

திருப்பதி

Tirupati | 23 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் காணிக்கை பணத்தை கணக்கிடுவதற்காக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupati, India

  திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தினமும் நான்கு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம், சில்லறை நாணயங்கள், தங்கம், வெள்ளி ஆகியவற்றை கோவிலுக்குள் இருக்கும் ஒரு பகுதியில் தேவஸ்தான நிர்வாகம் கணக்கிட்டு வருகிறது.

  இந்த நிலையில் ஏழுமலையான் கோவில் அருகே முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய புதிய கட்டிடம் ஒன்றை காணிக்கை பணத்தை கணக்கிடுவதற்காக தேவஸ்தான நிர்வாகம் கட்டியுள்ளது.

  13 வகையான சில்லறை நாணயங்களை பிரித்து எடுப்பதற்கு தேவையான இயந்திரங்கள், கரன்சி நோட்டுகளை கணக்கிடும் இயந்திரங்கள், சிசிடிவி கேமராக்கள், சில்லறை நாணயங்களை மூட்டைகளில் நிரப்ப தேவையான வசதிகள் ஆகியவை உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டிடத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தி திறந்து வைத்தார்.

  Also see... திருப்பதி பிரம்மோற்சவம் முதல் நாள் விழா...

  கட்டிடத்தின் இரண்டு புறமும் கண்ணாடி சுவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தில் காணிக்கை பணம் கணக்கிடுவதை பக்தர்கள் வெளியில் இருந்து பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Jagan mohan reddy, Tirumala Tirupati