Home /News /national /

நர்ஸ் கையிலிருந்து நழுவி விழுந்த கைக்குழந்தை.. பிறந்த உடனே உயிர் பறிபோன பரிதாபம்

நர்ஸ் கையிலிருந்து நழுவி விழுந்த கைக்குழந்தை.. பிறந்த உடனே உயிர் பறிபோன பரிதாபம்

இதையடுத்து, செவிலியர், மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்.19ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது தான் வெளியில் தெரிய வந்துள்ளது.

    லக்னோவில் செவிலியர் கையிலிருந்து தவறி விழுந்த பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தின் சின்ஹாட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிறந்த ஆண் குழந்தை செவிலியரின் கைகளில் இருந்து தவறி தரையில் விழுந்து உயிரிழந்துள்ளது. தொடர்ந்து, பிரேத பரிசோதனை அறிக்கையில், தலையில் ஏற்பட்ட காயமே மரணத்திற்கு காரணம் என்பதும் உறுதியாகியுள்ளது.

    இதையடுத்து, செவிலியர், மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்.19ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது தான் வெளியில் தெரிய வந்துள்ளது.

    இவ்விவகாரம் குறித்து உயிரிழந்த குழந்தையின் தந்தை ஜீவன் ராஜ்புத், காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்தே, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும், தற்போது வரை யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தொடர்ந்து, நடந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை ஜீவன் கூறும்போது, ஏப்.19ம் தேதி இரவு நேரத்தில் எனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தேன். அங்கு குழந்தை இறந்து பிறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் என்னிடம் தெரிவித்தனர்.

    Covaxin | 6-12 வயது குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி

    ஆனால், என் மனைவியிடம் பேசியபோது, அவருக்கு சுகப் பிரசவம் ஆனதாகவும், குழந்தை உயிருடன் இருப்பதை பார்த்ததாகவும், ஒரு செவிலியர் குழந்தையை எவ்வித துணியும் போர்த்தாமல் தன் கைகளில் எடுத்துச் சென்றதாகவும் கூறினார். அப்போது அவர் கைகளில் இருந்து நழுவி குழந்தை கீழே விழுந்துள்ளது, இதனை பார்த்த என் மனைவி, பீதியில் கத்தியுள்ளார். அப்போது அவரை சுற்றியிருந்த செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் அவரது வாயை அழுத்தி பிடித்து அவரை மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    எனினும், இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த மருத்துவமனை நிர்வாகம், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறியுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Uttar pradesh

    அடுத்த செய்தி