• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜகவின் புதிய தேசிய தலைவர் டிசம்பர் மாதத்தில் பொறுப்பேற்பார் - அமித்ஷா

பாஜகவின் புதிய தேசிய தலைவர் டிசம்பர் மாதத்தில் பொறுப்பேற்பார் - அமித்ஷா

அமித் ஷா

அமித் ஷா

  • News18
  • Last Updated :
  • Share this:
பாஜக புதிய தேசிய தலைவர் டிசம்பர் மாதத்தில் பொறுப்பேற்பார் என உள்துறை அமைச்சரும், தற்போதைய தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜகவில் ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதுவரை பாஜகவின் தேசியத் தலைவராக இருந்து வந்த அமித்ஷா கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.

இதையடுத்து பாஜகவிற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த அமித்ஷா, ‘பாஜகவின் புதிய தேசிய தலைவர் டிசம்பர் மாதத்தில் பொறுப்பேற்பார்’ என்று தெரிவித்தார்

மேலும் அவர் தான் பின்னால் இருந்து 'சூப்பர் பவர்' போல் இயக்க இருப்பதாக பரவும் செய்தியையும் அவர் மறுத்துள்ளார். 2014-ம் ஆண்டில் பாஜக தேசிய தலைவராக தான பொறுப்பேற்ற போதும் தனக்கு பின்னால் இருந்து 'சூப்பர் பவர்' இயங்கும் என்ற பேச்சு இருந்ததாகவும், ஆனால் தான் செயல்பட தொடங்கியதும் அப்பேச்சு ஓய்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் காங்கிரஸ் கட்சியை போல் பாஜக கிடையாது, யாரும் பின்னால் இருந்து இயக்க முடியாது என்றும் பிசிசிஐ நிர்வாக பொறுப்புக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை, கங்குலி தன்னை வந்து சந்தித்ததிலும் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அமித் ஷா கூறினார்.

Also watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Prabhu Venkat
First published: