பீகாரில் தேசிய கீதம் தெரியாமல் திணறிய கல்வி அமைச்சர்- வைரலாகும் வீடியோ

பீகாரில் தேசிய கீதம் தெரியாத கல்வி அமைச்சர் தட்டுத்தடுமாறி பாதியிலேயே அதனை நிறைவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் தேசிய கீதம் தெரியாத கல்வி அமைச்சர் தட்டுத்தடுமாறி பாதியிலேயே அதனை நிறைவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  பீகாரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றநிலையில் நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார். அவருடைய அமைச்சரவையில், கல்வி அமைச்சராக மேவாலால் சவுத்ரியை நியமித்தார். மேவாலால் சவுத்ரி மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

  இந்நிலையில் அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெளியிட்டது. இதில் தேசிய கீதம் பாடத் தொடங்கும் அமைச்சர் அடுத்தடுத்த வரிகள் தெரியாததால், வார்த்தைகளை மென்று விழுங்கி தடாலடியாக கடைசி வரியை இணைத்து தேசிய கீதத்தை முடிக்கிறார்.  மேலும் படிக்க...சகோதரிக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை: சவுகார்பேட்டை துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பகீர் பின்னணி  இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், உங்கள் மனசாட்சியை எங்கே மூழ்கடித்தீர்கள்? என்று நிதிஷ்குமாருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: