• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறை மற்றும் மோட்டார் வாகன சட்டத்திருத்தங்கள் இன்று முதல் அமல்..

கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறை மற்றும் மோட்டார் வாகன சட்டத்திருத்தங்கள் இன்று முதல் அமல்..

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

  • Share this:
    ஆன்லைன் பரிவரத்தனை மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அதன்படி இன்றுமுதல் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிகளில் தனியாக விண்ணபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது அதேபோல இதுவரை டிஜிட்டல் PAYMENT-களுக்கு பயன்படுத்தப்படாத கார்டுகளின் ஆன்லைன் பரிவர்த்தனைகளும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய விதிமுறைகளின் படி, வாடிக்கையாளர்கள் தங்களது செலவு வரம்புகளை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் அதன்படி ஏடிஎம் மையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு எவ்வளவு ரூபாய் எடுப்பது என்ற பரிவர்த்தனை வரம்பை, வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஏடிஎம் மற்றும் ஆன்லைன் சேவைகளை, வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் வாகன ஓட்டிகள் தங்களது ஆர்.சி.புக் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை டிஜிட்டல் முறையில் வைத்திருப்பதற்கான விதிமுறையும் இன்று முதல் அமலாகியுள்ளது.

    மேலும் படிக்க.. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்..



    அந்தவகையில் அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி.புக் காகித ஆவணங்களை, வாகன ஓட்டிகள் வைத்திருக்க தேவையில்லை எனவும், அதற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் வைத்திருக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனத் தணிக்கையின் போது, காகிதத்தால் ஆன ஆவணங்களை மட்டுமே, வாகன ஓட்டிகள் காண்பிக்கத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: